அசத்தல்: சுற்றுச்சூழலுக்கு வழி காட்டும் மதுரை மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 அக்
2020
11:14
பதிவு செய்த நாள்
அக் 27,2020 01:31

மதுரை : மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் பணிக்காக வெட்டப்பட இருந்த 484 மரங்களை அகற்றி வேறு இடத்தில் நட்டு, அவைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உயிர் வரம் அளித்துள்ளது.



வைகை அணை அருகே பண்ணைப்பட்டியில் மாநகராட்சியின் 23 ஏக்கர் நிலம் உள்ளது. இரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அங்கு உள்ளன. வைகை குடிநீர் திட்டங்கள் மூலம் மதுரைக்கு வரும் குடிநீர் அங்கு சுத்திகரிக்கப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மூலம் தோட்டம் பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டது.



காலியாக இருந்த 11 ஏக்கரில் மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, நாவல், தேக்கு கன்றுகளை நடவு செய்தது. இவை செழித்து வளர்ந்தன. இதில் கிடைக்கும் மகசூலை மாநகராட்சி ஏலம் விடும். 18 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் இத்தோட்டம் பராமரிக்கப்படுகிறது.



இந்நிலையில் கூடுதலாக குடிநீர் கொண்டு வர ரூ.1295 கோடியில் முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பண்ணைப்பட்டியில் மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டியுள்ளது. இதற்காக தோட்டத்தில் 5 ஏக்கரிலுள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் உருவானது. மா, கொய்யா, சப்போட்டா என 500 மரங்கள் வெட்டப்படயிருந்தன.



அந்த மரங்களை பிடுங்கி அருகே இருந்த காலியிடத்தில் நட கமிஷனர் விசாகன் அறிவுறுத்தினார். 2019 அக்., ல் 500 மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன. தொடர்ந்து பராமரிக்கப்பட்டது. இதில் 16 மரங்கள் தவிர மற்றவை தளிர்த்து நன்றாக வளர்ந்துள்ளன.



மரங்களை வெட்டாதீங்க!




மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளின் போது மரங்களை வெட்ட வேண்டிய சூழல் வந்தால், அவற்றை அகற்றி வேறு இடத்தில் நட்டு பராமரிக்கிறோம். பண்ணைப்பட்டியில் 484 மரங்களை வேறு இடத்தில் நட்டு அழகான தோட்டமாக்கினோம். மாநகராட்சி வளாகம், வெள்ளக்கல்லில் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட போதும் இதே பாணியை கடைபிடித்தோம்.



மியாவாக்கி காடுகள் திட்டத்தில் 3 ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளோம். 5 முதல் 15 அடி உயரம் வரை செழித்து வளர்ந்துள்ளன. புதிய இடங்களில் இக்காடுகளை பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். எந்த சூழலிலும் மரங்களை வெட்டாதீர்கள். அவசியமென்றால் அகற்றி வேறு இடத்தில் நட்டு உயிர் கொடுங்கள்.



-விசாகன், கமிஷனர் மாநகராட்சி



உயிர் பெற்ற மரங்கள்





வகை↔எண்ணிக்கை


மா 180


சப்போட்டா 116


கொய்யா 11


நெல்லி 82


நாவல் 59


வேம்பு 31


தேக்கு 5


மொத்தம் 484

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-அக்-202011:36:29 IST Report Abuse
Bhaskaran வாழ்த்துக்கள் மரங்களின் ஆன்மா உங்களை கண்டிப்பாக வாழ்த்தும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-அக்-202009:45:26 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள், இவர்களை நம் மாநரகத்துக்கு அழைத்து வந்தால் நல்லது நடக்கும். வந்தே மாதரம்
Rate this:
Cancel
28-அக்-202004:40:12 IST Report Abuse
தீதும் நன்றும் பிறர் தர வாரா வாழ்த்துக்கள் ஐயா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X