கொரோனா விபரம் வெளியிடுவதில் காஞ்சிபுரத்தில் தொடர்ந்து குழப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
04:53

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு விபரம் கிடைப்பதில், சில நாட்களாக குழப்பம் ஏற்பட்டு வருகிறது.



காஞ்சிபுரம் மாவட்டத்தில், 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் விபரம், அந்தந்த அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி நிர்வாகங்கள், தனியார் மருத்துவமனைகள் மூலமாக, சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டு வந்தது. பின், அங்கிருந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு, பாதிப்பு விபரம் கிடைக்கும்.இந்நிலையில், சில நாட்களாக, பாதிப்பு விபரம் சரிவர கிடைப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சுகாதாரத் துறையிடம் இருந்து சரியான புள்ளி விபரம் அனுப்பப்படுவது இல்லை' என்கின்றனர்.



ஏற்கனவே, கொரோனா பரிசோதனை குறைவாகவே எடுக்கப்பட்டு, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் குறைவாக இருப்பதாக கணக்கு காண்பிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் விபரங்களைகூட முறையாக வெளியிடாமல், மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் அலட்சியமாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.இவற்றை சரி செய்ய, மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கையில் 143: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரே நாளில், 143 பேருக்கு, கொரோனா தொற்று, நேற்று, உறுதி செய்யபட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 653 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 40 ஆயிரத்து, 897 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.இந்நிலையில், பல்லாவரம் - 45 பேர், தாம்பரம் - 41 வண்டலுார் - 24, செங்கல்பட்டு - 16, திருப்போரூர் - 10, மதுராந்தகம் - நான்கு, திருக்கழுக்குன்றம் - இரண்டு, செய்யூர் - ஒன்று என, மொத்தம், 143 பேர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேர் என, மொத்த பாதிப்பு, 42 ஆயிரத்து, 801ஆக உயர்ந்துள்ளது.இதில், 1,239 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 665 பேர் இறந்துள்ளனர்.திருவள்ளூரில் 141: திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று, 141 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 37 ஆயிரத்து, 269ஆக உயர்ந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 37 ஆயிரத்து, 128 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. நேற்று, 141 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை, 37 ஆயிரத்து, 269ஆக உயர்ந்தது.இதுவரை, 35 ஆயிரத்து, 421 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 615 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 1,233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X