விஸ்வநாதபுரத்தில் எம்.எல்.ஏ., முயற்சியால் தடுப்பணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 அக்
2020
11:22
பதிவு செய்த நாள்
அக் 27,2020 05:16

நெல்லிக்குப்பம்; பண்ருட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முயற்சியால் பெண்ணையாற்றின் குறுக்கே விஸ்வநாதபுரத்தில் தடுப்பணை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



பண்ருட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல கி.மீ., துாரத்திற்கு பெண்ணையாறு செல்கிறது. ஆனால் இந்த பகுதியில் ஒரு இடத்தில் கூட தடுப்பணை இல்லை. பல இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.பண்ருட்டி எம்.எல்.ஏ.,சத்யா பன்னீர்செல்வம், தொடர்ந்து தமிழக முதல்வரை வற்புறுத்தினார். அவரது முயற்சியால் ரூ. 28 கோடி ஒதுக்கி எனதிரிமங்கலத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது.தற்போது கண்டரக்கோட்டையில் ரூ.32 கோடியில் பணி நடக்கிறது. மேல்குமார மங்கலத்தில் ரூ.38 கோடியில் தடுப்பணை கட்ட பூமி பூஜை முடிந்து பணி துவங்கியது.நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் விஸ்வநாதபுரம், வான்பாக்கம் பகுதியில் பல ஆயிரம் நிலங்களுக்கு நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த ஆண்டு அந்த இடத்தில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்து பணியை துவக்கினர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் குவாரி நிறுத்தப்பட்டது.



விஸ்வநாதபுரத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.அரசாணைஇந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கடலுாரில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஸ்வநாதபுரத்தில் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்.



தற்போது விஸ்வநாதபுரத்தில் தடுப்பணை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.29 கோடி மதிப்பில் 385 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரத்திலும் தடுப்பணை கட்டப்படும். இதன் மூலம் நிலத்தடிநீர் உயர்ந்து 2206 ஏக்கர் நிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் நபார்டு வங்கியில் கடன் பெற்று செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவித்துள்ளனர்.சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கூறியதாவது, பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணையாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கூட இல்லை. இதனால் மழைக் காலத்தில் அதிகபடியான நீர் பயனின்றி கடலுக்கு செல்லும் நிலை இருந்தது. இதனால் நிலத்தடிநீர் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். விவசாயிகள் நலன் கருதி பண்ருட்டி தொகுதியில் எனது முயற்சியால் முதல்வர் உத்தரவுபடி எனதிரிமங்கலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம் பகுதிகளில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கி பணி நடக்கிறது.



தற்போது விஸ்வநாதபுரத்திலும் தடுப்பணை கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.எனது பதவி காலத்தில் தமிழக முதல்வர் பண்ருட்டி தொகுதியில் மட்டும் நான்கு தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியதால் இந்த தொகுதியில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். ஒரே சட்ட சபை தொகுதியில் 4 தடுப்பணைகள் கட்டுவது தமிழக அரசின் வரலாற்று சாதனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X