வேளச்சேரியில் ரூ.15 கோடியில் மூடு கால்வாய் பணி விறுவிறு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
06:24

சென்னை : வேளச்சேரி, திறந்தவெளி வீராங்கால் கால்வாயில், குப்பை கொட்டுவதை தடுக்கவும், சாலையை அகலப்படுத்தவும், 15 கோடி ரூபாய் செலவில், மூடு கால்வாயாக மாற்றும் பணி வேகமாக நடக்கிறது.



வேளச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், விரைவு சாலையை ஒட்டி உள்ள, 2 கி.மீ., நீளம், 20 அடி அகலம் கொண்ட, திறந்தவெளி வீராங்கால் கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது. 'பாப்காட்'கால்வாயை ஒட்டி, கடைகள் அதிகம் உள்ளன. பெரும்பாலான கடை உரிமையாளர்கள், குப்பையை கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழையின் போது, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வேளச்சேரி, இரண்டடுக்கு மேம்பால பணியுடன், ஒரு கி.மீ., நீள வீராங்கால் கால்வாய், மூடு கால்வாயாக மாற்றப்பட்டது.



மீதமுள்ள ஒரு கி.மீ., நீள, திறந்தவெளி கால்வாயை, மூடு கால்வாயாக மாற்ற, 15 கோடி ரூபாய் நிதியை, நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கியது. இதற்கான பணி, கடந்த ஆண்டு துவங்கியது. கால்வாயின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்திருந்ததால், அதை அகற்றி, ஒரு அடி அகலத்தில் கான்கிரீட் கலவையால் பலப்படுத்தப்படுகிறது. மேல் பகுதியிலும், கான்கிரீட் கலவை போட்டு, மூடு கால்வாயாக மாற்றப்படுகிறது.கால்வாய்க்குள், 'பாப்காட்' இயந்திரத்தை இறக்கி, துார் வாரும் வகையில், 600 அடி இடைவெளியில், 6 அடி அகலத்தில், 'சிலாப்' போடப்படுகிறது. சாலையில் வடியும் மழை நீர், கால்வாய்க்குள் விழும் வகையில், 75 அடி இடைவெளியில், இரும்பு ஜாளி அமைக்கப்படுகிறது.



நடவடிக்கைகனரக வாகனங்கள் ஏறினாலும், சேதமடையாத வகையில், சிலாப், இரும்பு ஜாளி கட்டமைக்கப் படுகிறது. பக்கவாட்டில், 6 அடி அகலத்தில் நடைபாதை அமைய உள்ளது. அதோடு, ஏரி நீருடன் வரும் குப்பை, கால்வாய்க்குள் செல்வதை தடுக்க, கால்வாய் துவங்கும் இடத்தில், இரும்பு வலை அமைக்கப்படுகிறது.இதன்மூலம், கால்வாயில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்படுவதுடன், விரைவு சாலையும், கூடுதல் அகலமாக மாறும்.தற்போது, 65 சதவீத பணிகள் முடிவு அடைந்து உள்ளன. இரண்டு மாதத்தில், அனைத்து பணிகளையும் முடிக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X