நாட்டு நடப்புகளை விலாவாரியாக தெரிந்து கொள்ள நாளிதழ் அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
06:36

ஊரடங்கு தளர்வை அடுத்து, சமீபத்தில், நுாலகங்கள் திறக்கப்பட்டன. ஆனால், தினசரி நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்கள் நிறுத்தப்பட்டன. இதனால், நாட்டு நடப்புகளை விலாவாரியாக தெரிந்து கொள்ள முடியாமல், வாசகர்கள் தவித்து வருகின்றனர்.



குறிப்பாக, முதியோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அந்த வகையில், தேனாம்பேட்டை மண்டலம், 123வது வார்டுக்கு உட்பட்ட, மயிலாப்பூர், வாரன் சாலையில், சென்னை மாவட்ட கிளை நுாலகம் உள்ளது.இப்பகுதியில் வசிக்கும், மாணவர்கள் முதல் முதியோர் வரை வாசிப்பு பிரியர்கள், இந்த கிளை நுாலகத்திற்கு, தினமும் சென்று, பல தரப்பட்ட நாளிதழ்கள், புத்தகங்களை படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.



இது குறித்து, அவர்கள் கூறியதாவது:கொரோனா தொற்று பரவல் காரணமாக, நுாலகங்கள் சிறிது நேரம் மட்டுமே திறக்கப்படுகிறது. வாசிப்பு பிரியர்களான எங்களுக்கு, நுாலகங்களுக்கு சென்று நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்க முடிவதில்லை.வீட்டில் ஒரு நாளிதழ் மட்டுமே வாங்குகிறோம். நுாலகங்களுக்கு சென்றால், பல நாளிதழ்கள், புத்தகங்களை படித்து பொழுதை போக்குவதுடன், நாட்டு நடப்புகள் பற்றி தெரிந்து, அறிவை வளர்த்து வருகிறோம்.



தற்போது, 'டிவி'யில் கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கே, நேரம் போதுமானதாக இருக்கிறது. செய்திகள் பார்க்க முடிவதில்லை. எனவே, நுாலகங்களை முழு நேரம் திறந்து, அரசின் வழிமுறைகளை பின்பற்றி, கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்து, நாளிதழ்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.'டோக்கன்' முறை அமல்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கு குறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதித்து, நாளிதழ்கள், புத்தகங்களை படிக்க அனுமதிக்க, அரசு முன் வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பல நுாலகங்களில், வளாகம் காலியாக இருக்கும். அங்கு, குறிப்பிட்ட சமூக இடைவெளி விட்டு, இருக்கை போட்டு வாசகர்களை, பத்திரிகை படிக்க வைக்கலாம். இடப்பற்றாக்குறையுடன், கூட்டம் அதிகமாக இருந்தால், வாசிப்பு நேரத்தை பகிர்ந்து கொடுக்கலாம். இது, கொரோனாவால், வீட்டிலே முடங்கி கிடக்கும் வாசகர்களுக்கு, புத்துணர்ச்சி அளிக்கும்.எஸ்.குமாரராஜா, 61, '''




வேளச்சேரிஅன்றாட நாட்டு நடப்புகளை, தினசரி பத்திரிகை வழியாக தான், விரிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. அனைத்து நுாலகங்களிலும், பத்திரிகை படிப்பதை தடை செய்வது முறையல்ல. இடவசதி அதிகமுள்ள நுாலகங்களும் உள்ளன. ஒருவர் எழும்பியபின், கிருமிநாசினியால் இருக்கையை சுத்தம் செய்து, அடுத்தவரை அமர வைக்கலாம். வாசகர்களும், மற்றவர்கள் நேரத்தை அபகரிக்காமல், கொரோனா முடியும் வரை, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இ.பன்னீர்செல்வம், 47, தரமணிநுாலகங்களை எப்போதும் போல், பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். அடுத்தபடியாக, அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்து, நாளிதழ்களை படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காலை, மாலை என, இரு வேளைகளிலும் திறக்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளை பின்பற்றி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், நுாலகங்களை திறக்க வேண்டும்.எஸ்.மீனாட்சி சுந்தரம், 66, குரோம்பேட்டை.ஊரடங்கு தளர்வையடுத்து, மதியம், 2:00 மணி வரை நுாலகம் இயங்குகிறது. இதை மாலை, 5:00 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்பது, வாசகர்கள் கோரிக்கையாக உள்ளது. மேலும், நுாலகத்தில் நாளிதழ்கள் வருவது, அரசு உத்தரவு படி நிறுத்தப்பட்டுள்ளது. நாளிதழ்களை மீண்டும் போடவும், அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மணவர்கள், வந்து செல்ல தடை ஏதுமில்லை. கொரோனா விதிமுறைகளையடுத்து, முதியவர்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வர தடை உள்ளது. மற்றபடி நுாலகம் சிறப்பாக செயல்படுகிறது.பி.ராஜன்பெருமாள், 62, நுாலகம் வாசகர் வட்ட தலைவர், அசோக் நகர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X