பாரம் தாங்காமல் கவிழ்ந்த டிரைலர் லாரி சென்ட்ரல் அருகே பெரும் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
06:56

சென்ட்ரல், : சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை நடக்கும் பகுதியில், பாரம் தாங்காமல் விபத்துக்குள்ளான டிரைலர் லாரியால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



சென்னை துறைமுகத்தில் இருந்து, 90 டன் அளவிலான இரும்பு காயில்களை ஏற்றியபடி, டிரைலர் லாரி ஒன்று திருவேற்காடை நோக்கி, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றது.லாரியை, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரைச் சேர்ந்தவர் சசிகுமார், 43, என்பவர் ஓட்டி சென்றார். லாரி, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நள்ளிரவு, 12:00 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அங்கு மெட்ரோ ரயில்வே சுரங்கப் பாதை பணி நடக்கிறது.



அதிர்ச்சி : சுரங்கப்பாதை பணி பாதிக்கப்படாத வகையில், 15 அடி நீளமுள்ள இரும்புத் தகடுகள் மேலே அமைத்து, சுரங்கப்பாதை மூடி உள்ளனர். அதன்மேல் வாகனப் போக்குவரத்து நடந்தது.இந்நிலையில், டிரெய்லர் லாரி, மெட்ரோ ரயில்வே சுரங்கப்பாதை இருப்பு தகடு மேல் கடந்தது. அப்போது, டிரைலர் லாரியின் பாரம் தாங்காமல், சுரங்கப்பாதை பள்ளத்தில் புதைத்தது. மேலும், ட்ரெய்லர் லாரியில் இருந்த இரும்பு காயல்களும், கழன்று பள்ளத்தில் விழுந்தன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



அதிர்ச்சியடைந்த டிரைலர் லாரி ஓட்டுனர், வண்டியை அங்கே விட்டு விட்டு தப்பினார். தகவல் அறிந்து வந்த பூக்கடை போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரயில்வே அதிகாரிகள், 30க்கும் மேற் பட்டோர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.போக்குவரத்து போலீசார், பூந்தமல்லி சாலை இருபுறமும் தடுப்புகள் அமைத்து, சாலையை அடைத்தனர்.அவ்வழியாக வந்த வாகனங்கள், பெரியமேடு வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.பின், மூன்று பெரிய கிரேன்கள் மூலம், பூமிக்கடியில் புதைத்த லாரியை, ஐந்து மணி நேரம் போராடி, வெளியில் எடுத்தனர்.



மேலும் பள்ளத்திற்குள் விழுந்த, தலா, 11 ஆயிரம் கிலோ அளவிலான, ஏழு இரும்பு காயல்களையும், நேற்று காலை வரை போராடி வெளியே எடுத்தனர்.சம்பவ இடத்தை, வடசென்னை போக்குவரத்து துணை ஆணையர் கிருஷ்ணராஜ், வடசென்னை போக்குவரத்து இணை ஆணையர் ரவிச்சந்திரன், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர், நேற்று பார்வையிட்டனர்.பரபரப்புமேலும், மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்து குறித்து, பூக்கடை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.



மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தில், அதிக பாரத்துடன் வரும் கனரக வாகனங்கள் இயக்கத்திற்கு, அரசு தடை விதிக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இச்சம்பவத்தால், சென்ட்ரல் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அசம்பாவிதம் தவிர்ப்புசென்ட்ரல் மெட்ரோ ரயில் பணியில் எப்போதும், 20 பணியாளர்கள் வழக்கமாக ஈடுபடுவர். நேற்று, ஆயுதபூஜை என்பதால், மெட்ரோ ரயில் பணி எதுவும் நடக்கவில்லை. இதனால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X