ஆரம்ப சுகாதார நிலையம் தயார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
07:04

துரைப்பாக்கம் : தரம் உயர்த்தப்பட்ட, துரைப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 1.46 கோடி ரூபாயில், கட்டப்பட்ட புதிய கட்டடம், திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.



சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, துரைப்பாக்கத்தில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. துரைப்பாக்கம், காரப்பாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி சுற்றுவட்டார பகுதிமக்கள், இந்த மருத்துவமனைக்கு செல்கின்றனர்.அருகில், பேருந்து நிறுத்தம் உள்ளதால், மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக, நோயாளிகள், ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேற்கூரையில், 'ஆஸ்பட்டாஸ் ஷீட்' உள்ளதால், மருத்துவமனைக்குள் வெப்பம் அதிகரித்து, குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கட்டடம், ஆங்காங்கே விரிசலும் விழுந்துள்ளது.


இதையடுத்து, மருத்துவ வசதிகளை அதிகரித்து, புதிய கட்டடம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 1.46 கோடி ரூபாயில், 7,200 சதுர அடி பரப்பளவில், மூன்றடுக்கு கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.படுக்கை வசதி, எக்ஸ் - ரே, இ.சி.ஜி., ரத்த பரிசோதனை, மின் துாக்கி போன்ற வசதிகளுடன் கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது. அருகில், சதுப்பு நிலம் உள்ளதால், வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க, தரை மட்டத்தில் இருந்து, 5 அடி உயரத்தில் மருத்துவமனை கட்டப்பட்டது.அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்காக, மருத்துவமனை காத்திருக்கிறது.


பருவ மழை துவங்க உள்ள நிலையில், அதற்குமுன், புதிய கட்டடத்தில் மருத்துவமனை செயல்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X