பட்டாக்கத்தியுடன் ரவுடி தொடர் அட்டூழியம்: 5 பெண்கள் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயற்சி | சேலம் செய்திகள் | Dinamalar
பட்டாக்கத்தியுடன் ரவுடி தொடர் அட்டூழியம்: 5 பெண்கள் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2020
09:49

சேலம்: ரவுடியின் அட்டூழியத்தை தாங்க முடியாமல், கலெக்டர் அலுவலகம் முன், நேற்றிரவு ஐந்து பெண்கள் உள்பட, 10 பேர் தீக்குளிக்க முயன்றனர்.


சேலம் அடுத்த காரிப்பட்டி, சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பவுன் குமார் மகன் சங்கர், 34, அவர் தம்பி சண்முககுமார், 24, அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் இளவரசன், 25, மனோகரன் மகன் ஜெகநாதன், 35, ஆறுமுகம் மகன் மணிகண்டன், 23. இவர்கள், தங்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்களுடன், நேற்றிரவு, 8:15 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு, தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், 10 பேரையும் தடுத்து நிறுத்தி மீட்டனர்.


அதன்பின், சங்கர் உள்ளிட்ட ஐவர் கூறியதாவது: நாங்கள், இரு டாடா ஏசி., வாகனத்தில் ஊர், ஊராக சென்று வெங்காயம், பூண்டு உள்ளிட்டவைகளை வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த ரவுடி கந்தசாமி, 38, வியாபாரத்துக்காக எடுபிடி வேலைக்கு வந்தவர், தினமும் கறிசோறு, மது கேட்டு பிரச்னை செய்தார். அவரை சமாளிக்க முடியாமல், சமீபத்தில் வேலையில் இருந்து நிறுத்தி விட்டோம். அதனால், குடித்துவிட்டு பிரச்னை செய்ததால், அவரை கண்டித்து, அரூர் மெயின் ரோட்டில் மறியல் செய்தோம். மீண்டும் நேற்றிரவு, 7:45 மணிக்கு பட்டா கத்தியுடன், வீடு தேடி வந்து எல்லோருடைய குடும்பத்தையும் ஒழித்து விடுவதாக கூறி, அட்டூழியத்தில் ஈடுபட்டார். உயிருக்கு, பயந்து தற்கொலைக்கு முயன்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக தகவல் தெரிவித்து, 10 பேரும் விசாரணைக்காக, வாழப்பாடி டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X