எத்தன தடவை சொன்னாலும்...: அறிவிப்பை மீறி அத்துமீறுவோரால் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
11:20

மேட்டுப்பாளையம்: நெல்லிதுறை அருகே பவானி ஆற்று நீரில் மூழ்கி, 38 பேர் இறந்துள்ளனர்' என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், இளைஞர்கள் இதை பொருட்படுத்தாமல், ஆற்றில் குளிக்க, கூட்டம் கூட்டமாக வருவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




பில்லுார் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், பவானி ஆற்றில் விளாமரத்துார், நெல்லிதுறை, பத்ரகாளியம்மன் கோவில், மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக, பவானிசாகர் அணைக்கு செல்கிறது. சமயபுரம் அருகே, பவானி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டி மின்சார உற்பத்தி செய்ய, தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர். இதனால், பத்ரகாளி அம்மன் கோவில் அருகேயுள்ள, நெல்லித்துறை பாலம் வரை தண்ணீர் அதிகளவு தேங்கியதால், பத்ரகாளியம்மன் கோவில் அருகே, ஆற்றில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.




இதையடுத்து, வெளியூரை சேர்ந்தவர்கள், ஆற்றில் குளிக்கும் இடத்தை, நெல்லித்துறை, குண்டுக்கல்துறை பகுதிகளுக்கு மாற்றினர். குண்டுக்கல் துறை, ஆழமான பகுதி என்பதால், நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர்.கடந்த நான்கு ஆண்டுகளில், இப்பகுதியில், 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க, மேட்டுப்பாளையம் போலீசார், பலி எண்ணிக்கையை குறிப்பிட்டு, ஆற்றுக்கு யாரும் செல்லாத வகையில், வழியில் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர்.




இதனால், பவானி ஆற்றில் குளிக்க வருவோர், தற்போது, விளாமத்துார் அருகேயுள்ள கஞ்சி பிள்ளையார் கோவில் பகுதிக்கு இடத்தை மாற்றியுள்ளனர்.இங்கும், அதிகளவு தண்ணீர் வருவது தெரியாததால், உயிர் பலி ஏற்படாமல் தடுக்க, போலீசார் மற்றும் வனத்துறை சார்பில், 'இங்கு குளிக்க தடை விதிக்கப்படுகிறது' என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதையும் மீறி, பலர் குளிக்க வருவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


வருவது தெரியாது





இதுகுறித்து, நெல்லித்துறை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்--இன்ஸ்பெக்டர் லிங்கையா கூறியதாவது:நெல்லிதுறையிலுள்ள குண்டுக்கல் துறை பகுதியில், ஆழம் நிறைந்துள்ளதாலும், குழியும், பள்ளமும் இருப்பதாலும், நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர். அங்கு, ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் போது, ஆற்றின் மையப் பகுதியில் உள்ள மண் திட்டில் நின்று, தங்களை காப்பாற்றும்படி கதறுகின்றனர்.



தகவலறியும் போலீசார், தீயணைப்பு துறையினர், பரிசல்காரர்கள் உதவியுடன், பல்வேறு சிரமங்களுக்கிடையே, ஆற்றின் நடுவே சிக்கியிருக்கும் பொதுமக்களை மீட்கின்றனர்.தற்போது, ஆற்றில் குளிக்கும் இடத்தை, விளாமரத்துார் அருகேயுள்ள கஞ்சி பிள்ளையார் கோவிலுக்கு மாற்றியுள்ளனர். அங்கும் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தும், அதையும் மீறி, இப்பகுதியில் சிலர் குளித்து வருவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உயிர் பலி ஏற்படாதவாறு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.



'நடவடிக்கை எடுக்கப்படும்'



மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி கூறுகையில், ''நெல்லிதுறை பகுதி, பவானி ஆற்றில் குளிக்க செல்பவர்களை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அங்கு போலீசார் நிறுத்தி வாகனங்களை ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Roja - riyadh,சவுதி அரேபியா
29-அக்-202000:30:24 IST Report Abuse
Raja Roja சுய ஒழுக்கம் யாரிடமும் இல்லை,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X