5 கி.மீ., தூரம் காரில் இழுத்து வரப்பட்ட ஆண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை | நாமக்கல் செய்திகள் | Dinamalar
5 கி.மீ., தூரம் காரில் இழுத்து வரப்பட்ட ஆண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2020
12:28

நாமக்கல்: திருச்சியிலிருந்து, கோவை நோக்கி, பொலிரோ காரை, கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்த, லோகநாதன், 45, நேற்று ஓட்டி வந்தார். மாலை, 6:30 மணிக்கு, நாமக்கல் ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே, காரின் அடிப்பகுதியில், ஆண் சடலம் ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்தது. இது குறித்து, கார் டிரைவர், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அந்த சடலம், நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில், காரில் சிக்கி இருப்பதும், ஐந்து கி.மீ., தூரம் இழுத்து வரப்பட்டதும் தெரியவந்தது. அவர் யார், எந்த ஊர், பெயர் என்ன என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் மீது சம்பந்தப்பட்ட கார் மோதியதில் பலியாகி இழுத்து வரப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது வாகனம் மோதி, சாலையில் கிடந்தவர், காரில் சிக்கி இழுத்து வரப்பட்டாரா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X