வடிகாலில் செல்லும் சாயக் கழிவுநீர் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
வடிகாலில் செல்லும் சாயக் கழிவுநீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2020
12:29

பள்ளிபாளையம்: பெரியார்நகர் பகுதி வடிகாலில் சாயக்கழிவுநீர் செல்கிறது. பள்ளிபாளையம் பகுதியில், ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இதில், ஒரு சில தவிர பெரும்பாலானவை, விதிமுறை மீறி இயங்குகின்றன. சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றுவதால், ஆற்றில் கலந்து, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து விதிமுறை மீறி செயல்பட்ட சாய ஆலைகளுக்கு, 'சீல்' வைத்தனர். இந்த நடவடிக்கையால் சில வாரங்கள் மட்டுமே சாயப்பட்டறைகள் விதிமுறைகளை கடைப்பிடித்தன. இந்நிலையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஆர்.எஸ்.,சாலையிருந்து பெரியார்நகர் பிரிவில் செல்லும் வடிகாலில் வெள்ளை நிறத்தில் சாயக்கழிவுநீர் சென்றது. எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X