கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
12:48

ஆத்தூர்: கள்ளக்காதல் விவகாரத்தில், கிணற்றில் கணவரை தள்ளிவிட்டு கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தொழிலாளி ரவி, 34. இவர் கடந்த, 8ல், ராஜி என்பவரது விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார். மாவட்ட எஸ்.பி., தீபாகானிகேர் உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைத்து, விசாரணை நடத்தப்பட்டது. இறந்த ரவியின் மனைவி உதயா, 27, அதே ஊரை சேர்ந்த சதீஷ், 24, என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததால், அதற்கு இடையூறாக இருந்த கணவரை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. நேற்று, கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உதயா, அவர் காதலன் சதீஷ் ஆகியோரை கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: கடந்த, 6ல், ரவி வீட்டில் இருந்து இரவு, 9:45 மணியளவில், வெளியே சென்றுள்ளார். அவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து, விசாரணை நடத்தப்பட்டது. இறந்த ரவியின் மனைவி உதயாவுக்கும், சதீஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரவியின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட சதீஷ், பெத்தநாயக்கன்பாளையம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்று, இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை அதிகமானதால் தடுமாறி சென்ற ரவியை, கிணற்றின் அருகில் அழைத்து சென்று கீழே தள்ளியுள்ளார். பின், உதயாவிடம் உன் கணவரை திட்டமிட்டபடி கொலை செய்துவிட்டேன். வெளியூர் சென்று விடலாம் என, உதயாவை அழைத்துள்ளார். பிரச்னை முடிந்ததும் செல்லலாம் என்று கூறியுள்ளார். பின், கணவர் தவறி கிணற்றில் விழுந்ததாக, பொய்யான தகவல் அளித்தார். திட்டமிட்டபடி கொலை செய்தது தெரியவந்ததால், இருவரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X