இதெல்லாம் ஒரு ரோடா? 'அமைதியாக' உள்ள அதிகாரிகள்: அவதிப்படும் வாகன ஓட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 அக்
2020
02:23
பதிவு செய்த நாள்
அக் 28,2020 01:01

திருப்பூர்:பனியன் ஏற்றுமதிக்கு சிறப்பு பெற்ற'டாலர் சிட்டி' என்ற பெயர் பெற்ற திருப்பூர் நகரம், மோசமான உட்கட்டமைப்பால், பின்னோக்கி சென்று விட்டது.பனியன் ஏற்றுமதி நகரான திருப்பூர், நாளுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், தனியார் மற்றும் அரசு துறை வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் உள்ளது.


வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்கள் என தொழில் மற்றும் வேலை நிமித்தமாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகர எல்லைக்குள் பயணிக்கின்றன. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம், சரக்கு வாகனம் என நகரில் ஏறத்தாழ நான்கு லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன.அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பி.என். ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு ஆகியன பிரதான ரோடுகள்.திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ரோடுகள், 2 லட்சம் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். ஆனால், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்ககின்றன. இதனால், எப்போதும் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.பிரதான ரோட்டில் ஒன்றான அவிநாசி ரோட்டில் திருப்பூருக்கான குடிநீர் திட்ட பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு முன் அமைக்கப்பட்ட குழாய்கள் என்பதாலும், அதிகளவில் வாகனங்கள் செல்விதாலும், குழாய்களில் உடைப்பு ஏற்படுவதும், ரோடு சேதமடைவதும் சகஜமாகி விட்டது.இதில், இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையாக (அவிநாசி - அவிநாசிபாளையம்) தரம் உயர்த்தப்பட்டது.


இருப்பினும் மழைநீர் வடிகால் முறையாக அமைக்காமலும், குழாய் உடைப்பு நிரந்தரமாக சரி செய்யப்படாமலும் பல இடங்களில் ரோடு, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.குறிப்பாக, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்,வேலம்பாளையம் பிரிவு, புஷ்பா சந்திப்பு உட்பட பல இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.அதேபோல் ஊத்துக்குளி ரோடு டி.எம்.எப். பாலம் பகுதியில் அணுகு சாலைகள் முறையாக தார் ஊற்றி போடாமல் ஜல்லி பரவியும், குழிகளாகவும் உள்ளது. காங்கயம் ரோடு வேலன் ஓட்டல் எதிர்புறம் ரோடு மோசமாக உள்ளது. ராக்கியாபாளையம் பிரிவு, காசிபாளையம் பிரிவு, பள்ளக்காட்டு பிரிவு பகுதிகளில் பாதி ரோடு வரை மணல் பரவிக்கிடக்கிறது.தாராபுரம் ரோட்டில், சங்கிலி பள்ளம், புதுார் பிரிவு, சந்திராபுரம் பிரிவு, செட்டிபாளையம் வளைவு ஆகிய இடத்திலும் ரோடு மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.மங்கலம் ரோடு பொதுவாகவே காணக்கூட சகிக்காத நிலையில் தான் இருக்கும். தற்போது ஆண்டிபாளையம் பிரிவு வரை பல்வேறு பணிக்கு தோண்டப்பட்ட நிலையில், பூதக்கண்ணாடி கொண்டுதான் ரோட்டையே தேடி கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.


திருப்பூரில் பெரும்பாலான ரோடுகள், இதுபோல் அவலமாகவே காட்சியளிக்கிறது. என்னதான், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்தாலும், அது முடியும் வரை காத்திருந்தால் பலரும் நோய்வாய்ப்டும் சூழல் ஏற்படும். எனவே, குறைந்தபட்சம் முறையான 'பேட்ஜ்' போட்டாவது, சீரமைக்க வேண்டும்.ஆய்வு செய்து சீரமைப்புஅதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி பகுதியில் ஏராளமான ரோடுகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.


புதிய ரோடு அமைக்கும் பணியும் சில இடங்களில் நடக்கிறது. குழாய் பதிப்பு உட்பட பணிகளுக்காக சில பகுதிகளில் ரோடு தோண்டி பணி நடக்கிறது.பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அப்பகுதிகளில் புதிய ரோடு போடப்படும். நகர பகுதியில் உள்ள வேறு சில ரோடுகளில் குழாய் உடைப்பு, மழை நீர் தேங்குவது போன்ற காரணங்களால் ரோடு சேதமடைந்துள்ளது. இதுபோன்ற ரோடுகள் உடனுக்குடன் சீரமைக்கப்படும். தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள ரோடுகள் ஆய்வு செய்து சரி செய்யும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202021:25:18 IST Report Abuse
ஆப்பு வேற எடத்துல நெடுஞ்சாலைத்துறையினர் மண்ணை தோண்டி பாலத்துக்கு கீழே கொட்டுறாங்களாம். அந்த உருப்படாதவங்களை இந்த ரோடு பள்ளத்துல கொட்டச் சொல்லுங்க.
Rate this:
Cancel
28-அக்-202007:41:27 IST Report Abuse
மதுமிதா மீண்டும் கற்காலத்திற்கு போய் விட்டோமா? தொல் பொருள் ஆராய்ச்சி நடக்கிறதா? மக்களுக்காக நாம் என்ற திரு முதல்வருக்கு களங்கம் வராது அதிகாரிகள் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
28-அக்-202007:37:20 IST Report Abuse
ஆப்பு திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ஆச்சே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X