குடகனாற்றில் தடுப்புச்சுவர் தண்ணீருக்காக போராட்டம்: கிராமத்தினர் மீது போலீசார் தடியடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
01:01

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் குடகனாறு ஆற்றில் தடுப்பு சுவரை அகற்றி, தண்ணீர் திறந்து விடக்கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 286 பேரை கைது செய்தனர்.



கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மலையடிவாரத்தில் உள்ள ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வந்து, அங்கிருந்து குடகனாறு வழியாக வழியோர கிராமங்களில் கண்மாய்களை நிரப்பி வேடசந்துார் குடகனாற்றிலும், கரூர் காவிரி ஆற்றிலும் கலக்கிறது. தற்போது ஆற்றின் குறுக்கே ராஜவாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டியதால் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீரின்றி வறட்சி நிலவுகிறது. விவசாயமும் பாதித்துள்ளது.



இதனால் தடுப்பு சுவரை அகற்றி, தண்ணீர் திறக்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.போலீசார் தடியடிநேற்று ஏராளமான கிராம மக்கள் கருப்புக் கொடியுடன் திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு பித்தளைப்பட்டி பிரிவில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதன் பின் சில கி.மீ.,க்கு நடந்தே வந்து திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.



போலீசார் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, டி.ஐ.ஜி., முத்துச்சாமி, எஸ்.பி., ரவளிப்பிரியா, குடகனாறு நிபுணர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உடன்பாடு எட்டாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பெண்கள் உட்பட 286 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X