காணோமுங்க: 'அம்மா ஸ்கூட்டர்' அப்ளிகேஷன்கள் மாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

29 அக்
2020
11:03
பதிவு செய்த நாள்
அக் 29,2020 01:52

கோவை : 'அம்மா ஸ்கூட்டர்' வழங்கக்கோரி மாநகராட்சியில் தரப்படும் விண்ணப்பங்கள் மாயமாகி விடுவதால் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளதாக, அப்பாவி பெண்கள் புலம்புகின்றனர்.



பணிக்கு செல்லும் அல்லது சுயதொழில் புரியும் பெண்களை ஊக்குவித்து உதவும் வகையில், 2017-18ம் ஆண்டு முதல் அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், 2017-18, 2018-19 ஆண்டுகளில், 9,898 பேர் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்றுள்ளனர். கொரோனா காரணமாக சில மாதம் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, 2019-20க்கான பணிகள் நடந்து வருகின்றன. 2020-21ம் ஆண்டுக்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.



இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்படுவதாகவும், தொலைத்து விடுவாகவும் புகார் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில், பொது போக்குவரத்தை பயன்படுத்த தயங்கும் பல பெண்கள், இரு சக்கர வாகனம் மானியத்தில் பெற விண்ணப்பிக்கின்றனர்.



விண்ணப்பதாரர் தீபா கூறுகையில், ''வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் 2018-19ம் ஆண்டில் விண்ணப்பித்தேன். மூன்று முறை விண்ணப்பத்தின் நிலை கேட்க சென்றால் போதுமான பதில் இல்லை. விண்ணப்பத்தை தொலைத்து மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க கூறுகின்றனர். இதே நிலை அனைத்து இடங்களிலும் தொடர்கிறது. திட்ட இயக்குனரிடம் புகார் அளித்துள்ளேன்,'' என்றார். இதே அனுபவம், கோவை மாநகரில் பல விண்ணப்பதாரர் களுக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு கூறுகையில், ''கோவையில், 37 டவுன் பஞ்சாயத்து, 12 யூனியன், 3 நகராட்சிகள், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.




களப்பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ''தேர்வு குழுவிடம் வரும் விண்ணப்பங்களை, மண்டல உதவி திட்ட அலுவலர்கள் கண்காணித்து உடனுக்குடன் ஒப்புதல் வழங்கி வருகிறோம். தொடர்ந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தி வருகிறோம்.



குறிப்பாக, எஸ்.சி., ஒதுக்கீட்டில் பயனாளிகள் குறைவாக உள்ளனர். தகுதியற்ற விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது.''ஒரு சில இடங்களில் இதுபோன்று வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தாமதம், முறைகேடு உட்பட எவ்வித புகாராக இருப்பினும் தயக்கமின்றி மாவட்ட கலெக்டர், மகளிர் திட்ட அலுவலர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X