ஆதாரில் தவறு இல்லாதவர் அதிர்ஷ்டம் செஞ்சவருங்கோ! திருத்தம் செஞ்சு பாருங்க; திணறித்தான் போயிடுவீங்க
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2020
02:02

கோவை : ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் அலைய வேண்டியிருக்கிறது.



உரிய ஆதாரங்கள் இருந்தால், ஒரே தடவையில், அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதார் அட்டை, அரசு அலுவலகங்கள், வங்கிகளில், அடிப்படை ஆவணமாக கையாளப்படுகிறது. அதன் முக்கியத்துவம் காரணமாக, பெயரில் தவறு, இனிசியல் இல்லாதது, முகவரி மாற்றம், மொபைல் போன் எண் இல்லாதது, பாலினம் தவறாக இருப்பது போன்றவற்றை சரி செய்வதற்காக, ஆதார் திருத்த மையங்களை தேடி பொதுமக்கள் வருகின்றனர்.



கோவையில், 'எல்காட்' சார்பில், 10 இடங்களிலும், மற்ற இடங்களில், தமிழ்நாடு அரசு கேபிள் கழகம் மூலமும் ஆதார் மையங்கள் நடத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு, 20 பேருக்கு மட்டுமே சேவை செய்யும் வகையில் கட்டுப்பாடு வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, 9:30 மணிக்கு டோக்கன் தருகின்றனர். மற்றவர்களை வேறு மையத்துக்கு அனுப்புகின்றனர் அல்லது, 'நாளை வாருங்கள்' என, திருப்பி அனுப்புகின்றனர்.மொபைல் போன் எண் இணைப்பது; பெயரில் திருத்தம்; பாலினம் மாற்றம் ஆகியவற்றை, தனித்தனி பதிவாக செய்ய வேண்டியுள்ளது.



குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகே, ஒவ்வொரு திருத்தமும் செய்ய முடியும். முகவரி மாற்றத்தை மட்டும் ஒரே நாளில் செய்ய முடியும்.சரியான ஆவணம் இல்லாமல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தால், மைய ஊழியர்களின் மீது குற்றச்சாட்டு பதிவாகிறது. அதிகப்படியான புகார் பதிவானால், அவரது அடையாள எண், ஓராண்டுக்கு முடக்கப்பட்டு விடும். அவரால், அதன்பின் எந்த மையத்திலும் பணியாற்ற முடியாது.இப்படி முடங்கியிருந்த கோவை வடக்கு, தெற்கு தாலுகா அலுவலக மையங்கள் இப்போது தான் செயல்பட தொடங்கியுள்ளன.



இதே காரணத்தால் வடவள்ளி, பொள்ளாச்சி மையங்களில், சேவை முடங்கியுள்ளது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த ஆதார் மையம், ஊழியருக்கு கொரோனா பாதிப்பால் முடங்கியுள்ளது.பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், 'ஆதார் திருத்தம் செய்ய, அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து, ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கிறது. உரிய ஆதாரங்கள் இருந்தால், ஒரே தடவையில், அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.என்ன சிக்கல்?ஆதார் மைய நிர்வாகிகள் கூறியதாவது:ஒரு மையத்தில், ஒரு நாளைக்கு, 30 பேருக்கே சேவை செய்ய முடியும்.



அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள், நண்பர்கள் பரிந்துரையில், தினமும், 10 பேர் வரை வந்து விடுவதால், நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், 20 பேருக்கு மட்டுமே திருத்த முடியும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X