கோவை தி.மு.க., பொறுப்பாளர் வீட்டில்வருமான வரி அதிகாரிகள் சோதனை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவை தி.மு.க., பொறுப்பாளர் வீட்டில்வருமான வரி அதிகாரிகள் சோதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2020
02:33

கோவை : கோவை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கிருஷ்ணன் வீட்டில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், 22க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.கோவை மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக இருப்பவர் கிருஷ்ணன் என்ற பையா கவுண்டர். இவரது வீடு, காளப்பட்டியில் உள்ளது. நேற்று மதியம், வருமான வரி துறை அதிகாரிகள் ஆறு பேர், கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த காவலாளியிடம், சோதனை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.சத்தியமங்கலம் சென்றிருந்த கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதை தொடர்ந்து, அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார். அவர் வரும் வரை அதிகாரிகள் காத்திருந்தனர்.



மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.அவரது தரப்பு வக்கீல்அருள்மொழி கூறுகையில், ''சோதனையின் போது, குடும்ப உறுப்பினர்கள், வீட் டிற்குள் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டனர். சோதனை நடத்த, முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்,'' என்றார். கிருஷ்ணன் வீடு முன் திரண்ட தி.மு.க., வினர், பின் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X