'ஜோஹோ கார்ப்பரேஷன்' மதுரை, தேனியில் துவங்கப்படும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2020
03:44

மதுரை : 'வெளிநாட்டு ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக திறமையாளர்கள் அவரவர் ஊர்களில் பணியாற்றிட முதற்கட்டமாக 'ஜோஹோ கார்ப்பரேஷன்' மதுரை, தேனி, நாகர்கோவிலில் துவங்கப்படும்' என நிறுவனர், சி.இ.ஓ., ஸ்ரீதர் வேம்பு இணையவழி சி.ஐ.ஐ., 'கனெக்ட் மதுரை' தொழில் கருத்தரங்கில் தெரிவித்தார்.



அவர் பேசியதாவது: வெளிநாடு, வெளிமாநில ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுவோர் பிறந்த நகரம், கிராமங்களில் பணியாற்றும் சூழலை உருவாக்க வேண்டும். தென்மாவட்டங்களில் திறமையாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்காக முதற்கட்டமாக மதுரை, தேனி, நாகர்கோவிலில் ஜோஹோ துவங்கப்படும், என்றார்.



அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: மதுரை, தெற்கு மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு சி.ஐ.ஐ., முயற்சிக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்க, தெற்காசியாவில் தகவல் தொழில்நுட்ப மையமாக மாற தகவல் தொழில்நுட்பத்தை அரசு ஊக்குவிக்கிறது. ஐ.டி., நிறுவனங்கள் 2018--19ல் ரூ.8,39,831 கோடி, 2019 முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஐ.டி., ஐ.டி.எஸ்., துறையில் ரூ.9,11,974 கோடி முதலீடு வந்தது.



பாரத் நெட் திட்டத்தில் ரூ.1815 கோடியில் 12,524 கிராமங்கள் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும். நகரங்களில் அதிவேக இணைய வசதிக்கு அரசு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.சி.ஐ.ஐ., மாநில தலைவர் ஹரி தியாகராஜன், மதுரை தலைவர் சதீஷ் தேவதாஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியா இயக்குனர் சஞ்சய் தியாகி, எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X