ரூ.2.72 கோடி: மண் சரிவால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

29 அக்
2020
11:04
பதிவு செய்த நாள்
அக் 29,2020 03:45

கடலூர் மாவட்டம் என்.எல்.சி.,இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தின் எல்லைப் பகுதிகளில் மலை போல் குவிக்கப்பட்டுள்ள மேல் மண் மழைக் காலங்களில் சரிந்து சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பாதிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது.



மண் சரிவினால்பாதித்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் இழப்பீடு வழங்குவதுடன் பாதித்த விவசாய நிலங்களை என்.எல்.சி., சுரங்கநிர்வாகத்தினர் சீர் செய்தும் கொடுத்து வருகின்றனர். கலெக்டர் ஆய்வுநடப்பாண்டில் பாதித்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது மற்றும்நிலத்தை சீர் செய்து தருவதுடன் நிரந்தர தீர்வு எற்படுத்தி தர என்.எல்.சி.,நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுரங்க அலுவலகத்தைமுற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.



இதையடுத்து என்.எல்.சி.,இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தை சுற்றியுள்ள கொம்பாடிக்குப்பம், கொளப்பாக்கம், அரசகுழி, பொன்னாலகரம் உட்பட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் பிரச்னைகள்குறித்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு மற்றும் மண் சரிவு ஏற்படாமல் தடுக்க, நிரந்தர தீர்வு ஏற்படுத்துமாறு என்.எல்.சி., உயரதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.இழப்பீடுஎன்.எல்.சி.,நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பாதித்த விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய சமரச பேச்சு வார்த்தையின் அடிப்படையில், மண் சரிவினால் பாதித்த விவசாயிகளுக்கு தலா ஏக்கர் ஒன்றுக்கு ரூ.27 ஆயிரம் வழங்குவது மற்றும் பாதித்த விவசாய நிலங்களை உடனடியாக சீர் செய்து தரவும் முடிவு செய்யப்பட்டது.



இதன்படி 120 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 72 லட்சம் வழங்கும் பணி துவங்கியது. என்.எல்.சி., நிலக்கரி சுரங்க அலுவலகத்தில்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுக்கான காசோலை சுரங்கங்களின் மனித வளத்துறை பொது மேலாளர் பெருமாள்சாமி வழங்கினார்.என்.எல்.சி.,நில எடுப்புத்துறை பொது மேலாளர் லட்சுமிகாந்த ராவ், சுரங்கங்களின் சிவில் பொது மேலாளர் சீனிவாசன் , பராமரிப்புத்துறை பொது மேலாளர் தயானந்த் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.மேலும் என்.எல்.சி.,சுரங்க நிர்வாகத்தரப்பில் மண் சரிவில் பாதித்த விவசாய நிலங்களை சீர் செய்யும்பணிகளும் மும்முரமாய் நடந்து வருகிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X