விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை (30ம் தேதி) கும்பாபிேஷகம் நடக்கிறது.இதையொட்டி, இன்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதிேஹாமம், மாலை 7:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.கும்பாபி ேஷகத்தையொட்டி,காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, காலை 7:30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 9:00 மணிக்கு விநாயகர், அருணாச்சலேஸ்வரர், முருகன் மற்றும்நவகிரகங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.