தந்தை திட்டியதால் மகள் தற்கொலை | கடலூர் செய்திகள் | Dinamalar
தந்தை திட்டியதால் மகள் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2020
03:51

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு காலனி புதுத்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் பூவரசி,17; இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாக வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.இதை ஏழுமலை கண்டித்து விட்டு ஏழுமலை மற்றும் இவரது மனைவி ஜோதி இருவரும் நிலத்திற்கு சென்று விட்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு ஏழுமலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. கதவை திறந்து பார்த்த போது வீட்டினுள் பூவரசி மின் விசிறியில் துாக்கு போட்டு இறந்திருந்தார். நடுவீரப்பட்டு போலீசார் சென்று பூவரசியின் உடலை கைப்பற்றி கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X