அ.ம.மு.க., ஆலோசனைக் கூட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
அ.ம.மு.க., ஆலோசனைக் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2020
03:52

கடலுார்; கடலுார் சட்டசபை தொகுதி அ.ம.மு.க., ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலுாரில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சத்தியராஜ், மாவட்ட அவைத் தலைவர் முருகன், இணை செயலாளர் உமா, துணை செயலாளர்கள் சேகர், சுதா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன் பங்கேற்று புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் பாடலீஸ்வரன், மணிகண்டன், அருள்செல்வன், செல்வம், பேரூராட்சி செயலாளர் பாக்கியராஜ், சார்பு அணி நிர்வாகிகள் சிவக்குமார், தங்கவேல், ராஜலட்சுமி, யுவராஜா, கருணாநிதி, அருள்ஜோதி, அகிலன், ஆனந்த், புவனேஸ்வரி பங்கேற்றனர்.கடலுார் சட்டசபை தொகுதியில் 1 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கடலுாரில் கிடப்பில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி பணியை துவக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X