மழையின்றி கருகிய பயிர்கள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மழையின்றி கருகிய பயிர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2020
04:03

கள்ளிமந்தையம் : 'கள்ளிமந்தையம் பகுதியில் மழையின்றி காய்ந்து போன மக்காச்சோளப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.



கள்ளிமந்தையம் பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கும் என்பதால் மானாவாரியாக மக்காச்சோளம் அதிகம் பயிரிட்டுள்ளனர். எதிர்பார்த்த அளவிற்கு மழையின்மையால் பயிர்கள் காய்ந்து வாடி வருகின்றன. இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. காய்ந்து போன பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.



விவசாயி சின்னச்சாமி கூறுகையில்,''மானாவாரியாக பயிரிட்ட மக்காச்சோளம், நிலக்கடலை உட்பட அனைத்து வகை பயிர்களும் காய்ந்து விட்டன. இவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'',என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X