ராஜபாளையம்: ஊராட்சி தலைவர் பதவிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இது வரை தங்கள் பகுதிக்கு மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாததால் வி. புதுார் மக்கள் பரிதவிக்கின்றனர்.
ராஜபாளையம் அருகே கீழ ராஜ குலராமன் ஊராட்சி உட்பட்ட இங்கு விவசாயம் மற்றும் அதை சார்ந்த கூலி தொழிலில் இப்பகுதியினர் ஈடுபட்டு வருகின்றனர்.பல ஆண்டுகளாக பெண்களுக்கான சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை.கிராமத்தின் பிரதான பகுதியில் வழிபாட்டு இடம் அருகே ஊரணி உள்ளது
இந்த நீர் பிடிப்பு பகுதியில்குப்பை தேங்கி கழிவு நீரும் கலந்துள்ளதால் அப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகரித்துள்ளதால் இப்பகுதியினர் அடிக்கடி உடல் நலம் பாதிக்கின்றனர். ஏற்கனவே இருந்து வந்த நுாலகத்தை ரேஷன் கடை பயன்பாட்டிற்கு மாற்றி விட்டனர். இளைஞர்கள் அறிவுசார்ந்து படிப்பதற்கான வேறு வாய்ப்பு இல்லை.