மனைவிக்கு கத்திக்குத்து கணவர் சுற்றிவளைப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
மனைவிக்கு கத்திக்குத்து கணவர் சுற்றிவளைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2020
05:46

பிராட்வே; பிராட்வேயில், மனைவியை கத்தியால் குத்திய கணவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, பிராட்வே, கொண்டி செட்டி தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன், 34; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.நேற்று, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மகாதேவன், கத்தியால் சாந்தியின் கழுத்தில் குத்தி, தப்பி ஓடினார். அக்கம்பக்கத்தினர் சாந்தியை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான மகாதேவனை கைது செய்து, விசாரித்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே போலீஸ் பாதுகாப்புடன், மகாதேவன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X