அடையாறு ஆற்றில் கொட்டிய மண் அகற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2020
05:54

சென்னை; சென்னை, சைதாப்பேட்டை பாலத்தின் கீழ், அடையாறு ஆற்றில், நீரோட்டத்திற்கு தடையாக கொட்டிய மண்ணை, நெடுஞ்சாலைத் துறை, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு அகற்றியது.



சென்னை, சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட, மறைமலை அடிகளார் பாலம், 600 அடி நீளம் உடையது. இதில், 27 அடி இடைவெளியில், 11 இடத்தில் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.அபாயம்ஆற்றில் வரும் தண்ணீர், துாண்களுக்கு இடைப்பட்ட கண்கள் வழியாக தடையின்றி செல்லும். பாலத்தை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை, வடிகால் பணிக்காக தோண்டப்படும் மண் கழிவுகள், துாண்களுக்கு இடைப்பட்ட கண் பகுதியில் கொட்டப்பட்டன.



இதனால், ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது, நீரோட்டம் தடைபட்டு, தண்ணீர் திசைமாறும் சூழல் ஏற்பட்டது.அடையாறு ஆறு, சைதாப்பேட்டை பகுதியில் இரண்டு இடத்தில் வளைந்து செல்கிறது. ஆதனுாரில் இருந்து, 40 கி.மீ., பயணித்து வரும் தண்ணீர், சைதாப்பேட்டையை அடையும்போது, கரை புரண்டு ஓடும்.அப்போது, நீரோட்டம் தடைபட்டு, தண்ணீர் குடியிருப்புகளில் புகும் அபாயம் உள்ளது. இது குறித்து, நம் நாளிதழில் நேற்று, முதல் பக்கத்தில், படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறையினர், சைதாப்பேட்டை பாலத்தின் கீழ் பகுதியில், நீரோட்டத்திற்கு தடையாக கொட்டிய மண்ணை, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு அகற்றினர்.உதாரணம்தொடர்ந்து, அந்த பகுதி முழுதும், நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் மண் திட்டுக்கள் அப்புறப்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



மழைக்காலத்தில், சென்னையில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துவதில், அடையாறு ஆற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதற்கு, ௨௦௧௫ வெள்ளம் மிகச்சிறந்த உதாரணம். இதை உணராமல், அரசு நிர்வாகமும், சில தனியார்களும், ஆற்றிலும், ஆற்றின் கரையிலும், கட்டட கழிவுகள், மண், குப்பைகளை கொட்டி, நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தினால், பொதுமக்கள், 'தினமலர்' அலுவலகத்தை, ௦௪௪ - 28540001 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
31-அக்-202006:57:13 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj தினமலருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் இது போன்ற நிகழ்வுகள் காஞ்சிபுரத்தில் அதிகமாகி சாலைகளின் அகலம் பாதிக்கப்பட்டும் நீளம் குறைக்கப்பட்டும் ஏன் ஒரு சில சாலைகளே முற்றிலும் ஆக்கிரமிப்புகடகு உள்ளாகியும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் கொசுக்கடி ஆகியவைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் அங்கீகரிக்கப்படட வரைபடங்கள் படி பொது இடங்கள் மற்றும் சாலைகள் கூட பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது மகேந்திரபல்லவன் தெருவில் நகராட்சியே நடு ரோட்டில் சாக்கடை கிணறு மற்றும் மோட்டார் அறையினை கட்டி சாலையின் அகலம் பாதியாக்கப்பட்டுள்ளது மகேந்திரபல்லவன் தெருவும் கே டி எஸ் மணி தெருவும் கீழ் முனையில் இணைக்கும் இணைப்பு சாலை பாதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது இதனை தங்களது பத்திரிகை வெளிக்கொணர்ந்தால் தான் விடிவு காலம் வரும் போலும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெளிவந்து வழி பிறக்கத்தான் செய்யும் ஆனால் அது தங்கள் பத்திரிகை வழி வந்து சாதனை படைக்கும் பத்திரிகை என்றிட்ட பட்டம் பெற்றிட வேண்டும் மக்களுக்கு பயனுள்ளதாய் விளங்கும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-அக்-202008:02:08 IST Report Abuse
Bhaskaran இதில் நல்லா கமிஷன் அடிச்சிருப்பாங்க புண்ணியவாளுங்க
Rate this:
Cancel
29-அக்-202007:37:11 IST Report Abuse
ஆப்பு முன்னாடி கொட்டுனதுக்கு ஒரு டெண்டர். திருப்பி அகற்ற இன்னொரு டெண்டர். அதிகாரிகள் காட்டில் மழை. நாலு அதிகாரிங்களை வூட்டுக்கு அனுப்பினா சரியா வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X