திட்டக்குடி : சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர்களை கைது செய்யக்கோரி, திட்டக்குடி போலீஸ் நிலையம் முன் பா.ம.க.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, நேற்று முன் தினம் மாடு மேய்க்க சென்றார். மூன்று வாலிபர்கள் அச்சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்ய முயன்றனர். சிறுமியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால், வாலிபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று மதியம் 1.30 மணியளவில் பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், திட்டக்குடி போலீஸ் நிலையம் முன் திரண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று, கலைந்து சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மருதத்துாரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கருணாமூர்த்தி, 31; சிறுமியின் வாயை பொத்தி துாக்கிச் சென்று, பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது. அவர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.