குப்பையில்லா நகரம் உருவாக்கும் புது முயற்சி திருவினையாக்கும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

30 அக்
2020
09:49
பதிவு செய்த நாள்
அக் 30,2020 00:05

கோவை: கோவை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவை கொண்டு உரம் தயாரிக்கும் பணியில், மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கோவை நகர் பகுதியில் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 450 டன் வரை மக்கும் தன்மை கொண்டவை. மக்கும்/ மக்காத குப்பை என, தரம் பிரிக்காமல் கொட்டுவதால், மேலாண்மை செய்ய முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் தவிக்கிறது.


வெள்ளலுார் கிடங்கில் குப்பை கொட்ட முடியாத, நெருக்கடியான சூழல் தற்போது உருவாகியுள்ளது. பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ள கண்காணிப்பு அலுவலரான, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியும், கடுமையாக எச்சரித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையத்தை செயல்படுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தலா, 5 டன் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் வகையில், 69 இடங்களில் மையங்கள் அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், 345 டன் மக்கும் குப்பை உருவாகும் இடத்திலேயே அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதுவரை, 24 இடங்களில் மையம் கட்டுமான பணி முழுமையாக முடிந்திருக்கிறது; 12 மையங்களில், இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன; இவற்றில், 6 மையங்களே வெற்றிகரமாக செயல்பாட்டில் இருக்கின்றன. மீதமுள்ள, 6 மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இதில், மிகவும் முக்கியமானது, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் செயல்படும் மையம். நாளொன்றுக்கு, 1.5 டன் காய்கறி கழிவுகள் சேகரமாகின்றன.


சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில், 2 டன் கழிவுகள் கிடைக்கின்றன. இவற்றை சேகரித்து, இயந்திரங்கள் மூலம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தொட்டியில் போட்டு, சாணம் தெளிக்கின்றனர்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை கிளறி விடுகின்றனர். 45வது நாளில், உரம் தயாராகிறது. பின், சல்லடையில் சலித்து, உரத்தை பாக்கெட் போடுகின்றனர். இதுவரை, 5 டன் உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.வேளாண் பல்கலையில் அதன் தரம் உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு, வீட்டுத்தோட்டங்களில் பயன்படுத்தி வருகின்றனர். உரம் தயாரிக்கும் மையத்தை, மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:திட்டமிட்டபடி, அனைத்து மையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், 345 டன் மக்கும் குப்பை கிடங்கிற்கு செல்வது தவிர்க்கப்படும். ஓட்டல் கழிவு, அடுக்குமாடி குடியிருப்பு கழிவுகளை, உருவாகும் இடத்திலேயே அழிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தினால், அக்குப்பையும் வெள்ளலுார் செல்வது தவிர்க்கப்படும்.


கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தை செயல்படுத்த மீண்டும் முயற்சிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், குப்பையில்லா நகராக, கோவையை உருவாக்க முடியும்.இது, சாத்தியமாக வேண்டுமெனில், சமையல் அறையில் இருந்து மாற்றம் உருவாக வேண்டும்.


சமைக்கும்போது, உருவாகும் கழிவுகள் மற்றும் வீட்டில் சேகரமாகும் இதர கழிவுகளை, தனி தனி தொட்டியில் சேகரித்து, வீடு வீடாக வரும் தொழிலாளர்களிடம் பிரித்து வழங்க வேண்டும். அவ்வாறு தரம் பிரித்து குப்பையை வழங்கினால், துாய்மை நகரமாக மாறும். எதிர்காலத்தில் குப்பை கொட்ட தொட்டியே வைக்க வேண்டிய சூழல் வராது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X