19 நாளாகியும் குடிநீர் வரவில்லை! கவுண்டம்பாளையம் மக்கள் கண்ணீர் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
19 நாளாகியும் குடிநீர் வரவில்லை! கவுண்டம்பாளையம் மக்கள் கண்ணீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
00:53

கோவை:குடிநீர் பகிர்மான குழாயை ஆமை வேகத்தில் மாற்றுவதால், வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்போருக்கு குடிநீர் வினியோகம், 19 நாட்களை கடந்து விட்டது. அப்பகுதி மக்கள், அவதிக்குள்ளாகி உள்ளனர்.வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்போருக்காக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தும் வகையில், பகிர்மான குழாய்களை, குடிநீர் வடிகால் வாரியம் புதுப்பித்து வருகிறது. இப்பணியின் போது, தற்போது சப்ளையாகும் குழாய்களை உடைத்து விடுகின்றனர். அதனால், பொதுமக்களுக்கான வினியோகம் பாதிக்கப்படுகிறது. கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்போருக்கு, குடிநீர் வழங்கி, 18 நாட்களுக்கு மேலாகி விட்டது.வழக்கமாக, குடிநீர் கசிவு சீரமைக்கும் பணியை, மின் வினியோகம் தடை செய்யும் நாட்களில் மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு செய்யாமல், பண்டிகை சமயத்தில் வினியோகத்தை நிறுத்தி, கசிவை சரி செய்யும் பணியில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்டதால், சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர். இதேபோல், ஆழியாறில் இருந்து குடிநீர் எடுத்து சப்ளை செய்யும் குறிச்சி, குனியமுத்துார் பகுதிக்கும், 15 நாட்களுக்கு ஒருமுறையே கிடைக்கிறது.சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. 'சீரற்ற முறையில் குடிநீர் வினியோகிப்பதை தவிருங்கள். அனைத்து பகுதிகளிலும் சீராக ஒரு வாரத்துக்குள் சப்ளை செய்ய வேண்டும். குடிநீர் வினியோகிக்கும் நாட்கள் இடைவெளியை குறைக்க வேண்டும். குழாய் உடைப்பு மற்றும் கசிவை உடனுக்குடன் சரி செய்து, வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்' என குடிநீர் பிரிவு அலுவலர்களுக்கு கமிஷனர் அறிவுறுத்தினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X