புதர்களை பூங்காவாக மாற்றும் 'மேஜிக்': இணையதளத்தில் மாநகராட்சி 'சாகசம்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
புதர்களை பூங்காவாக மாற்றும் 'மேஜிக்': இணையதளத்தில் மாநகராட்சி 'சாகசம்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
00:54

கோவை நகரில் தற்போது மாநகராட்சிவசம், 1450 பொது ஒதுக்கீட்டு இடங்களில் ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த இடங்களில் பூங்காக்களை அமைத்தால் லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வளர்க்கலாம். பல லட்சம் குழந்தைகள் விளையாட மைதானங்களை உருவாக்கலாம். நடை பயிற்சிக்கு பாதை அமைக்கலாம்.ஆனால் மாநகராட்சி முழுவதுமே கணக்கிட்டாலும், 300க்கும் குறைவான பூங்காக்கள்தான், மேம்படுத்தப்பட்டு உள்ளன. செம்மொழி மாநாட்டின்போது ஒரே நேரத்தில், 150க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அதற்குப்பின், கோவையின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் மட்டுமே, 50க்கும் மேற்பட்ட பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.அவற்றிலும் மரம் வளர்ப்பதற்கோ, காற்று மாசைக் குறைத்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தாவரங்களை வளர்ப்பதற்கோஎந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக, கணக்குக் காண்பிப்பதற்கான மேக்கப் வேலைகள்தான் அதிகம்நடந்துள்ளன. இவற்றைத் தவிர்த்து, 30க்கும் மேற்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்பது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றம் தனிநபர்கள் தொடுத்துள்ள 70 வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகளை துரிதப்படுத்தி, ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பதில் மாநகராட்சி நிர்வாகம் துளியும் அக்கறை காட்டுவதேயில்லை.ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள பொது ஒதுக்கீட்டு இடங்களில், 100 ஏக்கருக்குள் குறைவான இடங்களே பூங்கா, விளையாட்டு மைதானங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் பெரும்பாலும் புதர்மண்டி, திறந்தவெளி மதுக்கூடமாகவும், வாகன நிறுத்துமிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை, மாநகராட்சி இணையதளத்தில் பூங்கா என பட்டியல் போட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.குறைந்தபட்சமாக, இந்த இடங்களில் 'மாநகராட்சிக்குச் சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடம்' என்ற அறிவிப்புப் பலகையை வைப்பதற்குக் கூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கசப்பான உண்மை. 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சியில் பணிகள் நடக்கின்றன.மத்திய அரசின் நிதியுதவியுடன் நடக்கும் இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளில், 100 பூங்காக்களையாவது மாநகராட்சி நிர்வாகம் மேம்படுத்தியிருக்கலாம்.டில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் குறைந்தபட்சம் குடியிருப்புக்கு ஒரு பூங்கா வீதம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் இடங்கள் இருந்தும் நகருக்குள் பூங்காக்களைப் பார்ப்பது அரிதாக உள்ளது. இந்த விஷயத்தில் குடியிருப்போர் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?----நமது சிறப்பு நிருபர்--

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X