சமூகத்துக்கு பயன்தரும் ஆராய்ச்சி வேண்டும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2020
00:58

புதிய கல்வி கொள்கை குறித்து துணைவேந்தராக உங்களின் பார்வை என்ன?ஒரு மனிதனுக்கு அறிவு, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கற்று கொடுப்பது கல்வி தான். அந்த கல்வி காலத்துக்கு ஏற்ப மாற்றம் பெற வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சாதித்து செல்ல மாற்றங்கள் அவசியம் தேவை.கடந்த, 1948ல் பல்கலை கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது, பின், 1986ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை உருவானது. இது, 1992ல் திருத்தம் செய்யப்பட்டது. தற்போதைய புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கும் பணிகள், 2016ல் துவங்கி, 2019ல் முழுமை பெற்றுள்ளது. கல்வி கொள்கையை உருவாக்குவதில் வெற்றி பெற முடியாது. அதை உரிய முறையில் செயல்படுத்துவதில் தான் வெற்றி இருக்கிறது. இதை முழு அளவில் செயல்படுத்தும் பொறுப்பு நம் அனைவரின் கையிலும் உள்ளது.உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, 2035ம் ஆண்டுக்குள் மாணவர் சேர்க்கையை, 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. உயர்கல்வி சேர்க்கை சதவீதம், 50 என்ற அளவை எட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை தமிழகம் ஏற்கனவே எட்டி விட்டது. நமது மாநிலத்தை பொறுத்தவரை, பள்ளி படிப்பை முடிப்பவர்களில் மொத்தம், 49 சதவீதம் பேர் கல்லுாரிகளில் சேர்கின்றனர்.மத்திய அரசு, 2035ம் ஆண்டுக்கு வைத்த இலக்கை தமிழகம் தற்போதே எட்டிவிட்டது. அதேபோன்று தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த சதவீதம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கைக்கு, 50 சதவீதம் இலக்கு நிர்ணயித்தால், தமிழகம், 75 சதவீத இலக்கை நோக்கி செல்ல வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளின் நிலை எப்படி உள்ளது?ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள், 75 சதவீதம் 'பேப்பர் பப்ளிகேஷன்' நோக்கியே செல்கின்றனர். இதற்கு காரணம், நிறுவனங்கள் அதை ஒரு அளவுகோலாக வைத்து மாணவர்களை வேலைக்கு எடுக்கின்றனர். அதனால் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, புதுமைகளை கண்டுபிடிக்கும் மாணவர்கள் கூட, காப்புரிமை பெற்று அதை மக்களுக்கு ஏற்ற பயனுள்ள பொருளாக மாற்றுவதில்லை.சமுதாயத்துக்கு பயனுள்ள, உபயோகப்படும் விஷயங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும். காப்புரிமை பெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுபோன்ற மாணவர்களுக்கு நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் கட்டாயம் சமுதாய பயன்பாட்டுக்கு ஏற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவர். மாணவர்களுக்கு உங்களின் பொதுவான அறிவுரை என்ன?பாரதியார் பல்கலை வேலை வழிகாட்டி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இதில், 90 சதவீத மாணவர்கள் தங்களது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பிறர் அறிவுறுத்தலின் பேரில் படிப்புகளை தேர்வு செய்வது தெரியவந்தது. வெறும், 6 சதவீத மாணவர்களே சுயமாக முடிவு எடுக்கின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களது விருப்பம் என்ன, ஆற்றல் என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதை புரிந்தால் தான் ஒரு குறிப்பிட்ட துறையில் காலுான்றி சாதிக்க முடியும். தங்களின் ஆற்றல், விருப்பம் குறித்து அறிந்து கொள்ள முடியாத மாணவர்கள், பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்களை அணுக வேண்டும். இதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X