சாணார்பட்டி : சாணார்பட்டி மற்றும் கோபால்பட்டி பகுதியில் பரவும் 'ரூகோஸ்' எனும் வெள்ளை ஈக்களால் தென்னை விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
இப்பகுதியில் தென்னை மற்றும் மா சாகுபடி முதன்னை விவசாயமாக உள்ளது. ஏற்கனவே இப்பகுதி வறட்சியால் பல ஏக்கர் தென்னை அழிந்துவிட்டது. எஞ்சியுள்ள தோப்புகளை போர்வெல் மற்றும் சொட்டுநீர் பாசனம் மூலம் காப்பாற்றி வருகின்றனர்.இந்நிலையில் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஈக்கள் தென்னை இலைகளின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு, பச்சையத்தை உறிஞ்சி வளர்கின்றன. இதனால் இலை பழுப்பு நிறமாக மாறி காய்ப்புத்திறன் குறைகிறது.
இந்த ஈ மா, பலா, கொய்யா, வாழை, சீதாப்பழம் போன்ற பயிர்களையும் தாக்கும். இதனால் 50 சதவீதத்திற்கு மேல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.வேளாண்துறையினர் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.