சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு: திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்னாச்சு? | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு: திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்னாச்சு?
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
02:08

ஆனைமலை:ஆனைமலை அடுத்த மீனாட்சிபுரத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரிப்பதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை அடுத்த மீனாட்சிபுரத்தில் கேரள எல்லை வரையில், ஓட்டல்கள், பேக்கரிகள், துரித உணவுக்கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இவற்றில், அரசு தடை செய்துள்ள பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.இந்நிலையில், மீனாட்சிபுரம் ரோட்டோரத்தில், தினமும் பிளாஸ்டிக் கழிவுகளை கடைக்காரர்கள் கொட்டி தீ வைப்பதால், சுகாதாரம் மாசடைகிறது. மேலும், திவான்சாபுதுார் ஊராட்சியினர், குடியிருப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பை சேகரிக்காமல் மெத்தனமாக உள்ளனர்.இதனால், மக்கள் வேறு வழியின்றி ரோட்டோரங்களில் குப்பை கொட்டுகின்றனர். ஊரெல்லாம் குப்பையாக கிடப்பதால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி கையாடல் செய்யப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.விசாரணை தேவைஆனைமலை ஒன்றியம் முழுவதிலும், 80 சதவீத ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. மக்களிடம் குப்பை தரம் பிரித்து சேகரித்து, மக்கும் குப்பையில் உரம் தயாரிப்பதில்லை.பல ஊராட்சிகளில் திடக்கழிவு திட்டம் முழுமையாக முடங்கியுள்ளது. ஆனால், அரசு தொடர்ந்து திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. அப்போது, ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகள் கையாடல் செய்யப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திவான்சாபுதுார் ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான். இது குறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X