தொட்டியில் தண்ணீர் இல்லை: அலைமோதும் கால்நடைகள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தொட்டியில் தண்ணீர் இல்லை: அலைமோதும் கால்நடைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
02:09

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டியில், ஆடு, மாடுகள் குடிப்பதற்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்புவதில்லை.கொண்டம்பட்டி ஊராட்சியில், 2018-19ம் ஆண்டில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கோதவாடி செல்லும் ரோடு அருகில், ஆடு, மாடுகள் குடிப்பதற்கான தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது.இத்தொட்டி, பெரிய புளிய மரத்தின் கீழ் அமைந்துள்ளதால், ஆடு, மாடுகள் மேய்ப்பவர்கள் தொட்டி அருகே கட்டி வைத்து வருகின்றனர்.ஆனால், தொட்டியில் தண்ணீர் நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தொட்டி வறண்டு காணப்படுகிறது. கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றன.தொட்டிக்கு தண்ணீர் விடாமல் உள்ள நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மற்றொரு தொட்டி கட்டப்பட்டு, பயன்பாடு இன்றி காணப்படுகிறது.இவ்விரு தொட்டிகளிலும் ஊராட்சி சார்பில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X