ரூ.9.7 கோடி ஜி.எஸ்.டி., மோசடி: கோவையில் ஒருவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2020
02:48

கோவை:கோவையில், 9.7 கோடி ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்த நபரை, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை ஜி.எஸ்.டி.,கமிஷனரக அதிகாரிகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யாமல் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து கோவை, 'எம்.எஸ்.கே., அசோசியேட்ஸ்' எனும் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆய்வில், பொருட்களை வினியோகம் செய்யாமல், ரசீதுகள் வழங்கியது தெரிந்தது. நிறுவனத்தின் உரிமையாளர் சம்பத்குமார், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பழைய இரும்பு விற்பனையாளர்களுக்கு போலி பில்களை வழங்கியது தெரிந்தது. 9.7 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து சம்பத்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.கோவை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் கோவிந்தராஜ் கூறுகையில்,''ஜி.எஸ்.டி., சட்டப்படி, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், ரசீது இல்லாமல் பொருட்கள், பொருட்களின்றி ரசீது, பொருட்களை வினியோகம் செய்யாமல் ரசீதுக்கு கடன் கொடுப்பது ஆகியவை மிகப்பெரிய குற்றம். இந்த வரி ஏய்ப்பு, ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதால், பிணையில் வர முடியாத சட்டத்தில் சம்பத்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பலரிடம் விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
30-அக்-202020:10:46 IST Report Abuse
John Miller நான்கு நாட்களில் ஜாமினில் வெளியே வந்து viduvaar.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X