மாதவரம் அரசு பால்பண்ணை பசுமை பூங்கா புதுப்பொலிவு பெறுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

30 அக்
2020
06:14
பதிவு செய்த நாள்
அக் 30,2020 05:28

மாதவரம்; அரசு பால்பண்ணையின் அடையாளமான, பசுமை பூங்காவை மேம்படுத்த, மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கிய பணி, வேலி அமைக்க, கல் நடப்பட்டதோடு நின்று போனதால், பூங்கா புதுப்பொலிவு பெறுமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.



சென்னை, மாதவரம் பால்பண்ணையில், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை நிர்வாக அலுவலகம் எதிரில், 2 ஏக்கர் பரப்பளவில், பால்பண்ணை தொழிலின் அடையாளமாக, பசு, கன்று, பசுவிடம் பால் கறக்கும் மனிதன், ஜல்லிக்கட்டு காளைகள், காவலர் என, தத்ரூபமான சிலைகளுடன், பசுமை பூங்கா அமைந்திருந்தது.'குடி'மகன்களின் 'பார்'அங்கு, பால்பண்ணை துறைக்கான, 800 ஏக்கர் பரப்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வளாகம், மீன் வளத்துறை கல்லுாரி, கோழி உள்ளிட்ட பறவை மற்றும் விலங்கின வளர்ப்பு பண்ணை, புற்கள் வளர்க்கும் ஆராய்ச்சி பண்ணை செயல்முறை வளாகம், அரசு மருத்துவமனை, தோட்டக்கலைத் துறை, தோட்டக்கலை பூங்கா என, பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பார்வையாளர்கள் என, அனைவரையும் வரவேற்கும், அழகிய பூங்காவாக இருந்தது. மேலும், மணலி மற்றும் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு செல்லும் இரு சாலைகள் துவங்கும் நுழைவாயிலில் உள்ள, அந்த பூங்காவை சுற்றி, பெரிய மரங்கள் உள்ளன.



மேலும், பூங்காவிற்கு அழகு சேர்க்கும் வகையில், பசு மற்றும் கன்றுகள் மேய்வது போல், அழகிய சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. பால்பண்ணை என்பதற்கு பொருத்தமான அடையாளமாக அந்த பூங்கா இருந்தது.ஆனால், பால்பண்ணை மேம்பாட்டு நிர்வாகத்தின் அலட்சியத்தால், அந்த பூங்கா பராமரிப்பின்றி, 'குடி'மகன்களின் 'பார்' மற்றும் பொது கழிப்பறையாக மாறிவிட்டது. இது குறித்து, நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, பூங்காவை மேம்பாடு செய்ய, 2017ம் ஆண்டு, அத்துறையின் மூலம், கணிசமான நிதி ஒதுக்கப்பட்டது. எதிர்பார்ப்புஅதன் மூலம், சுற்றிலும் இயற்கை எழில் சூழ, தடுப்பு, நீரூற்றுகள், நடை பயிற்சி பாதை, பால் வளத்துறையின் பெருமையை விளக்கும் வகையில், பசுக்களின் சிலைகள் ஆகியவை அமைக்கப்படும் என, நிர்வாகத்தினர் கூறினர்.அடுத்த சில நாட்களில் அங்கிருந்த குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டன. வேலி அமைக்க, சிமென்ட் கற்கள் நடப்பட்டன. ஆனால், அதன் பின், இன்று வரை எந்தப்பணியும் நடக்கவில்லை. இப்போது, புதர் மண்டி கிடக்கிறது. பால்பண்ணையின் அடையாளமான பசுமை பூங்கா, புதுப்பொலிவு பெறுமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,மாதவரம், மணலி பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள் உருவாகி உள்ளன. அவற்றில் வசிப்போர், பொழுது போக்கு, நடைபயிற்சிக்காக, மாநகராட்சி பூங்காக்களை தேடிச்செல்கின்றனர். ஆனாலும், இந்த பசுமை பூங்கா அவர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. இயற்கை சூழலுடன், பால்பண்ணை தொழிலின் பெருமையை உணர்த்தும் வகையில், இந்த பூங்காவை, பால்பண்ணை நிர்வாகம் மேம்படுத்த வேண்டும். மேலும், பூங்காவின் ஒரு பகுதியில், 'அம்மா' உணவகம் அமைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X