2 ரவுடிகள் மீது பாய்ந்தது குண்டாஸ் | சேலம் செய்திகள் | Dinamalar
2 ரவுடிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
09:50

காரிப்பட்டி: சேலம் அருகே, மேட்டுப்பட்டி, பள்ளத்தாதனூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24. அவரது நண்பர், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், 28. ரவுடிகளான இவர்கள் கூட்டாக சென்று, குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தனர். கடந்த மாதம், கொலை மிரட்டல் வழக்கில், இருவரையும், காரிப்பட்டி போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது, கொலை, அடிதடி, வழிப்பறி என, தலா, எட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., தீபாகானிகேர் பரிந்துரைத்தார். அதையேற்று, கலெக்டர் ராமன் உத்தரவிட்டதால், இருவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X