மருத்துவமனை விடுதியில் மின்விசிறி அபேஸ்: மதுபானம் அருந்த திருடிய ஊழியர்கள் கைது | சேலம் செய்திகள் | Dinamalar
மருத்துவமனை விடுதியில் மின்விசிறி அபேஸ்: மதுபானம் அருந்த திருடிய ஊழியர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
09:50

வீரபாண்டி: மருத்துவமனை மாணவர் விடுதியில், 16 மின்விசிறியை திருடிய ஊழியர்களை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மதுபானம் அருந்த திருடியது தெரிந்தது. சீரகாபாடி, அன்னபூர்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர் விடுதி, ஊரடங்கால், எட்டு மாதமாக பூட்டப்பட்டுள்ளது. நேற்று காலை, அதன் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பாதுகாவலர்கள், கண்காணிப்பாளர் கணேசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது, விடுதியில் இருந்த, 16 மின்விசிறிகள் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், அதே மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டிரைவரான, நெத்திமேட்டை சேர்ந்த பழனிசாமி, 64, பிளம்பரான, தாரமங்கலம் பழனிசாமி, 53, ஆகியோர் திருடியது தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: மதுப்பழக்கத்துக்கு அடிமையான இருவரும், இங்கு, 20 ஆண்டாக பணிபுரிகின்றனர். எட்டு மாதமாக விடுதி பூட்டப்பட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும் எனக்கூறி, பாதுகாவலரிடம் சாவியை பெற்று, மின்விசிறிகளை திருடி, ஜன்னல் கம்பிகளை உடைத்து வெளியே வீசிவிட்டு, விடுதியை பூட்டி சாவியை கொடுத்துள்ளனர். பின், இரவில் மின்விசிறிகளை எடுத்துக்கொண்டு திருட்டு நடந்ததை போல் இருக்க வேண்டும் என்பதற்காக, பூட்டை உடைத்து நாடகமாடியுள்ளனர். அவர்களிடம் இருந்து, 16 மின் விசிறிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X