தேர்தலை முன்னிட்டு உளவுத்துறை ஆதரவுடன் முக்கிய பிரமுகர்களை வளைப்பதில் பா.ஜ., தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2020
10:41

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய உளவுத்துறை ஆதரவுடன், முக்கிய பிரமுகர்களை வளைப்பதில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.


அரசியல் கட்சியினர், தமிழகத்தில் வரும், 2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எதிர் முகாம்களை சேர்ந்தவர், சினிமா நட்சத்திரம், தொழிலதிபர்களை, தங்கள் பக்கம் வளைக்க காய் நகர்த்துவர். இந்த விஷயத்தில், பா.ஜ.,வினர், தற்போது தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, அக்கட்சியின், தமிழக தலைவராக முருகன் நியமிக்கப்பட்ட பின், அவர், பலரை பா.ஜ.,வில் சேர்க்க ஆர்வம் காட்டினார். அதன்படி, தி.மு.க.,வில் இருந்து வி.பி.துரைசாமி, ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, நடிகை குஷ்புவை தொடர்ந்து, சென்னையை சேர்ந்த, இரு தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சுவார்த்தை நடந்து, அவர்கள் விரைவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், பிற நகரங்களுக்கு, முருகன் செல்லும்போது, பல்வேறு கட்சியினர், பா.ஜ.,வில் இணைகின்றனர். மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகளும், பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்களை, தங்கள் பக்கம் வளைத்து வருகின்றனர். இதற்கு, மத்திய உளவுத்துறை அளிக்கும் பட்டியலே காரணம் என தெரியவந்துள்ளது. அவர்கள், மாவட்டம், மாநகரம், நகரம், ஒன்றிய அளவில், தி.மு.க., - அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ளவர்களின் பட்டியல் தயாரித்து வழங்குகின்றனர். அப்பட்டியலில் உள்ளவர்களை, முதலில், உள்ளூர் கட்சியினர் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கி, பின், மேலிட பார்வையாளர், தலைமைக்கு தெரிவித்து அனுமதி பெற்று வளைத்து போட்டு வருகின்றனர். வழக்கமாக, தேர்தல் நெருங்கும் நிலையில் ஆள் பிடிக்கும் படலத்தை, அ.தி.மு.க., - தி.மு.க., கையில் எடுக்கும். தற்போது, பா.ஜ., கையில் எடுத்து, மாற்று கட்சியினரை வளைத்து போட்டு வருவது, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X