தேனியில் 12 பவுன் நகை திருட்டு | தேனி செய்திகள் | Dinamalar
தேனியில் 12 பவுன் நகை திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 அக்
2020
00:13

தேனி : தேனியில் பஞ்சாலை அதிபர் வீட்டில் மர்மநபர்கள் 12பவுன் நகையை திருடிச் சென்றனர்.



தேனி என்.ஆர்.டி.,நகரில் வசிப்பவர் சீனிவாச ராகவன் 58. கோவையில் பஞ்சாலை நடத்தி வருகிறார். இவரது சகோதாரர் அங்கு கொரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை பார்க்க2 நாட்களுக்கு முன் குடும்பத்தோடு கோவை சென்றனர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோ, அலமாரிகளை உடைத்து12பவுன்தங்க நகை,750 கிராம் வெள்ளி பொருட்கள்என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களைதிருடிச்சென்றனர்.தேனி டி.எஸ்.பி.,முத்துராஜ், இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X