பறவைகளை காண குவியும் பொது மக்கள்... கூட்டம்! செஞ்சி பொன்பத்தி ஏரியை கலெக்டர் பார்வை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
00:23

செஞ்சி : செஞ்சி பொன்பத்தி ஏரியில் மாலை நேரத்தில் குவியும் பறவைகளை காண பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.



இயற்கை அவ்வப்போது எந்த அறிவிப்பும் இன்றி எண்ணற்ற மாற்றங்களை செய்து வருகிறது. இதற்கு சாட்சியாக செஞ்சி நகரை ஒட்டி உள்ள பொன்பத்தி ஏரியில் திடீரென லட்சக்கணக்கான பறவைகள் குவிந்து வருகின்றன. கடந்த ஆண்டு இதே நாளில் மற்ற ஏரிகளை போலவே ஒன்றிரண்டு பறவைகளுடன் காணப்பட்ட பொன்பத்தி ஏரியில் இந்த ஆண்டு பிப்., மார்ச் மாதத்தில் திடீரென புதுவகை பறவைகள் தென்பட்டன.



இவற்றில் சில பறவைகள் இதற்கு முன்பாக செஞ்சி பகுதியில் காணப்படாதவை. அப்போது இதை பெரிதாக யாரும் கண்டு கொள்ள வில்லை. ஆனால் அடுத்து வந்த மாதங்களில் மாலை நேரத்தில் ஏராளமான பறவைகள் வரத்துவங்கின. தற்போது மாலை நேரத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான பறவைகள் குவிய துவங்கி விட்டன.ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ள நீர்நிலைகளில் பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை மத்திய மாநில அரசுகள் பறவைகள் சரணாலயங்களாக அறிவித்து பாதுகாத்து வருகின்றன.



தமிழ்நாட்டில் இப்போது வரை வேடந்தாங்கல், பழவேற்காடு உட்பட 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.தற்போதுள்ள சரணாலயங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் துவங்கி பறவைகள் வர துவங்குகின்றன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் வருகின்றன. கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து வரும் பறவைகள் ஏப்ரல், -மே மாதம் வரை சரணாலயங்களில் தங்கி இனப்பெருக்க காலம் முடிந்ததும் தங்களின் வசிப்பிடம் திரும்புகின்றன.



கடந்த சில மாதங்களாக பொன்பத்தி ஏரிக்கு வரும் பறவைகளில் நீர்காகங்கள், நீர்க்கோழிகள், கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, காகம், பலவகை குருவிகளும், இந்த பகுதியில் இதற்கு முன்பு காணாத புதிய பறவைகளும் வந்துள்ளன.லட்சக்கணக்கில் குவியும் பறவைகளை காண செஞ்சி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தும் தினமும் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். பொது மக்கள் வருகையினால் டீ, காபி மற்றும் தின்பண்ட கடைகள் வந்து விட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பொது மக்கள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



விவசாயத்திற்கும் பலன்பறவைகள் வருகையினால் விவசாயம் பாதிக்கும் என்ற அச்சம் அந்த பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் பறவைகளின் எச்சம் கலந்த நீரில் நைட்ரஜன் சத்து மிகுந்து காணப்படும். இவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் இயற்கை உரமாக மாறி விளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.



பட்டாசு வெடிக்கலாமா



சரணாலயம் அமைப்பது குறித்து செஞ்சி வனச்சரகர் வெங்கடேசன் கூறுகையில்; பறவைகள் வருகை குறித்து கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு வாய் மொழியாக தகவல் தெரிவித்துள்ளோம். பொது மக்கள் கோரிக்கையை ஏற்று அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்யும் போது பறவை ஆராய்ச்சியாளர்களை கொண்டு விரிவான ஆய்வு நடத்தப்படும்.அந்த அறிக்கையின் படி சரணாலயம் அமைப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இப்போது பறவைகளை பாதுகாக்க காலை, மாலையில் வனகாவலர்கள் ஏரி பகுதியில் ரோந்து வருகின்றனர். இதுவரை நான்கு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இரண்டு பேரை கைது செய்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



தீபாவளிக்கு ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பட்டாசு வெடிக்காமல் இருந்தால் பறவைகள் வெளியேறாமல் இருக்கும். பொது மக்கள் ஒத்துழைப்பு தந்து விழிப்புணர்வுடன் ஏரியின் அருகாமையில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். கலெக்டர் பார்வை பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்ததால் நேற்று கலெக்டர் அண்ணாதுரை, சப் கலெக்டர் டாக்டர் அனு ஆகியோர் பொன்பத்தி ஏரியை பார்வையிட்டனர். அப்போது வனத்துறை மூலம் பறவைகளின் வருகை குறித்து ஆய்வு செய்யப்படும் என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X