பாகூரில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்கப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
00:55

பாகூர் : பாகூர் பகுதியில் இரைதேடும் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



புதுச்சேரியின் நெல் களஞ்சியமாக திகழ்ந்து வரும் பாகூர் பகுதியில் சம்பா பருவத்திற்கான உழவு பணி நடைபெற்று வருகிறது. வயல்வெளியில் உள்ள பூச்சி, புழுக்களை உண்பதற்காக, கொக்கு, நாரை, செரவி மற்றும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இரைதேடி வருகின்றன.



கூட்டம் கூட்டமாக நெல் வயலில் இரைதேடும் பறவைகள், பயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வெட்டுக்கிளி, குருத்து பூச்சி, எலி உள்ளிட்ட பூச்சிகளை உணவாக உண்டு அதனை அழித்து விடுகின்றன. பறவைகளின் எச்சம் நீரில் கலந்து பயிர்களுக்கு உரமாக மாறி விடுகிறது.



இவ்வாறு இரை தேடும் பறவைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பாகூர் சித்தேரி மணப்பட்டு ஏரி, அரங்கனுார், உச்சிமேடு ஏரி, பாகூர் ஏரிக்கரை, தமிழக பகுதியான கரைமேடு, உள்ளேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில், மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வலை விரித்தும், கோழி இறைச்சி கழிவில் விஷம் கலந்து வைத்து, பறவைகளை வேட்டையாடி வருகின்றனர்.



பறவைகள் மூலம் இயற்கையான முறையில் பூச்சிகள் அழிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு இடு பொருட்கள் செலவில், பூச்சி மருந்திற்காக செலவிடும் பணம் மிச்சமாகி விடும்.பறவைகள் வேட்டையாடப்படுவதால், அதன் வருகை குறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வயல்வெளியில் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பூச்சிகளை அழிக்க விவசாயிகள் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.



இதனால், தீமை செய்யும் பூச்சிகள் மட்டுமின்றி, மகரந்த சேர்க்கை நடைபெற உதவியாக இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளும் அழியும் நிலை ஏற்பட்டு மகசூலும் குறைந்து விடும் அபாயம் உள்ளது.எனவே, பாகூர் பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X