ராயபுரம் தோல் பொருள் குடோனில் தீ விபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
02:18

ராயபுரம்; ராயபுரத்தில் உள்ள, தோல் பொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்,எரிந்து நாசமாயின. தீ விபத்தால், ராயபுரம் பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது.சென்னை, ராயபுரம், லோட்டஸ் ராமசாமி தெருவில், புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்கூல், டிராவல்பேக்குகள், சூட்கேஸ்பாதுகாத்து வைக்கும் குடோன் உள்ளது.இக்குடோனில், இரண்டு பெண்கள் உட்பட, ஆறு பேர் பணிபுரிகின்றனர். இதன் உரிமையாளர், குஷார் ஜெயின் என்பவர் மும்பையில் உள்ளார்.இந்த குடோனின் மேலாளராக, குல்தீப் ஷர்மா என்பவர் பணிபுரிகிறார்.நேற்று மதியம், 1:30 மணி அளவில், குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால், அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது.தகவலறிந்து, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, துறைமுகம், எஸ்பிளேனேடு உள்ளிட்ட, ஏழு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வண்டிகள் வந்தன. மேலும், ராயபுரம் குடிநீர் நிலையத்தில் இருந்தும், ஐந்து தண்ணீர் லாரிகள் விரைந்து வந்தன.சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணா, உதவி மாவட்ட அலுவலர் ஏழுமலை தலைமையில், 80 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். மேலும், இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம், குடோன் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. வீரர்களின், ஐந்து மணி நேரம் போராட்டத்திற்கு பின், தீ கட்டுக்குள் வந்தது.தீ விபத்தை பார்வையிட்டு, வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறிய தாவது:குடோனில் பணிபுரிந்த, ஆறு பேரும் பத்திரமாக உள்ளனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. முதற்கட்டமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த குடோனை சுற்றியிருந்த, 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.பின்னர், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்தால், ராயபுரம் முழுதும் கரும்புகை சூழ்ந்து உள்ளது. எனவே, ராயபுரம் மக்கள் பீதி அடைய வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தீ விபத்து குறித்து, குடோன் மேலாளர் குல்தீப் சர்மா, ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தெரிகிறது.படம் ரமேஷ்

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X