கொரோனாவால் அரிதான பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
02:25

சென்னை: கொரோனா தொற்றால், அரிதான பாதிப்புக்கு உள்ளான சிறுவனை, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றி மறுவாழ்வு அளித்துள்ளனர்.



சென்னையைச் சேர்ந்த, 14 வயது சிறுவனுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால், 'மில்லர் பிஷர் சிண்ட்ரோம்' எனப்படும், 'கில்லாய்ன் பாரி சிண்ட்ரோம்' பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு, பார்வை திறன் குறைவு, நடப்பதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, டாக்டர்கள் அளித்த நவீன தொடர் சிகிச்சையை தொடர்ந்து, அவர் குணமடைந்தார். இது குறித்து, காவேரி மருத்துவமனையின் நரம்பியல் துறை டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் கூறியதாவது:'கில்லாய்ன் -பாரி சிண்ட்ரோம்' என்பது, அரிதான கோளாறாகும். கொரோனா தொற்றுடன், ஏற்பட்ட பாதிப்பை குணப்படுத்துவது சவாலாக இருந்தது. இதற்கு, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க தவறியிருந்தால், பக்கவாதம் ஏற்படும் நிலை உருவாகும். மருத்துவமனையில் உள்ள, அதிநவீன கருவிகள் உதவியுடன் அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, சிறுவனால் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது. தற்போது, சிறுவன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளான்.இவ்வாறு, அவர் கூறினார். காவேரி மருத்துவமனையின், தொற்று நோய் சிகிச்சை பிரிவு டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியதாவது:கொரோனா தொற்றில் விடுபட்ட பலருக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு பின், தீவிர நுரையீரல் சிக்கல், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தநாள பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா தொற்றுக்கு பின், அவ்வப்போது பரிசோதனை செய்வது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X