மடத்துக்குளம்;'மடத்துக்குளம் தாலுகா பகுதியில், பல கிராமங்களில், நீர்நிலைகளில், நேரடியாக கழிவு நீர் கலந்து, சாக்கடையாக மாறுவதை தடுக்க வேண்டும்,' என பா.ஜ.,வினர் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பல கிராமங்களில், சாக்கடைகள் வாய்க்கால்களில் கலக்கின்றன.இது குறித்து ஒன்றிய பா.ஜ., வினர், அரசுக்கு அனுப்பியுள்ள மனு:மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம், கடத்துார், காரத்தொழுவு, கணியூர், உள்ளிட்ட பல பகுதிகளில் சாக்கடைக்கழிவுகள், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கும் விதமாக கட்டமைப்பு உள்ளது. இதனால் மிகவும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். நோய்த்தொற்று அபாயமும் உள்ளது. வாய்க்காலில் வழிந்தோடி வரும் பாசனநீருடன், கழிவுகள் கலந்து வருவதால் விளைநிலங்கள் அசுத்தம் அடைகின்றன. இதற்கு தீர்வாக, கிராமம் மற்றும் நகரப்பகுதியில் உள்ள சாக்கடைகள் எந்தவித நீர்நிலைகளிலும் கலக்காமல், தரிசு நிலங்களில் தேக்கப்பட்டு உலர்ந்து விடும்படி புதிய அமைப்பில் சாக்கடை கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.