ரோடு போட மறந்துட்டாங்க! குழியில் தவிக்கும் மக்கள் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ரோடு போட மறந்துட்டாங்க! குழியில் தவிக்கும் மக்கள்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

31 அக்
2020
07:04
பதிவு செய்த நாள்
அக் 31,2020 06:08

உடுமலை:உடுமலை நகராட்சி பகுதியில், பாதாளச்சாக்கடை பணிக்காக தோண்டிய ரோடு புதுப்பிக்கப்படாமல், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.உடுமலை நகராட்சி, பஸ் ஸ்டாண்ட் அருகே, அனுஷம் நகரில் பாதாளச்சாக்கடை குழாய் அமைப்பதற்காக, ரோடு தோண்டப்பட்டது. குழாய் மற்றும் ஆளிறங்கும் குழி அமைக்கப்பட்ட நிலையில், ரோடு போடப்படாமல் பல மாதமாக உள்ளது.


இதனால், ரோடு குண்டும், குழியுமாகவும், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. பொதுமக்கள் கூறுகையில்,' பாதாளச்சாக்கடை திட்டப்பணி முடிந்ததும், ரோடு அமைக்க வேண்டும். மற்ற பகுதிகளில் அமைக்கபட்ட நிலையில், அனுஷம் நகர் ரோடு போடப்படாமல், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X