சென்னை டாக்டர், மகன் ஆற்றில் மூழ்கி பலி : உடுமலை அருகே சோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
06:58

மடத்துக்குளம்;மடத்துக்குளம் அருகே கடத்தூர், அமராவதி ஆற்றில், மூழ்கிய மகனைக் காப்பாற்றும் முயற்சி, தோல்வியடைந்து தந்தை மகன் இருவரும் பலியானார்கள்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கணியூர் பகுதியை சேர்ந்த ஜோதிலிங்கம் 42; சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் இருதய பிரிவு மருத்துவர். தனது சொந்த ஊரான கணியூருக்கு வந்துள்ளார்.நேற்று மதியம் இவர் தனது மகன் சர்வேஸ் ராஜா, 11 மற்றும் சிலருடன் கடத்துார் அர்ச்சனேஸ்வரர் கோவில் முன் செல்லும், அமராவதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். ஆற்றில் குறைந்தளவே நீரோட்டம் இருந்ததால், தண்ணீர் தேங்கியிருந்த பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். திடீரென மகன் சர்வேஸ் ராஜா, நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.இதைப் பார்த்த ஜோதிலிங்கம் ஆற்றின் நடுப்பகுதியில், தத்தளித்த மகனை காப்பாற்ற போராடியுள்ளார். ஆனால், முயற்சி பலனின்றி தந்தை, -மகன் இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலால் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், மூன்று மணி நேரம், ஆற்றின் ஆழமான பகுதியில் தேடி, ஜோதிலிங்கம், சர்வேஸ்ராஜா சடலங்களை மீட்டனர். இருவரின் உடல்களும், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கணியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
31-அக்-202007:29:40 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாவம் ஆத்மா சாந்தி அடையட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X