சேலம்: கொலை வழக்கில் சிக்கிய மூன்று பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சேலம், கிச்சிப்பாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் அகமதுபாட்ஷா, 45. இவர் கடந்த செப்., 5ல், டவுன் காந்தி சிலை அருகே, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பசாக, களரம்பட்டி சதீஷ், 34, பாத்திமா நகர் உமர், 34, ஆகியோரை, டவுன் போலீசார் கைது செய்தனர். அதேபோல், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஸ்வர்ணாம்பிகை தெருவில், தஞ்சாவூரை சேர்ந்த மலர்செல்வி, 49, என்பவர், செப்., 19ல் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, திருவாக்கவுண்டனூர் மனோகரன், 21, என்பவரை, போலீசார் கைது செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்படி செயல்பட்டதால், மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, டவுன் போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டதால், சேலம் மத்திய சிறையில் உள்ள மூவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.