நிழற்குடை இருந்தும் பயன்படுத்தாத பயணியர் | சேலம் செய்திகள் | Dinamalar
நிழற்குடை இருந்தும் பயன்படுத்தாத பயணியர்
Added : அக் 31, 2020 | |
Advertisement
 

வீரபாண்டி: நிழற்குடை இருந்தும், பயணியர் பயன்படுத்தாமல், மரத்தடியில் ஒதுங்குகின்றனர்.

சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில், சீரகாபாடி மேம்பாலம் அருகே, விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேம்பால இணைப்பு சாலை அருகே இல்லாமல், 100 மீட்டர் தூரம் தள்ளி உள்ளது. இதை, பயணியர் பயன்படுத்தாமல், மேம்பால இணைப்பு சாலைக்கு எதிரே உள்ள மரத்தடியில் நின்று, பஸ் ஏறி, இறங்குகின்றனர். இதனால், சீரகாபாடி மட்டுமின்றி, மருத்துவமனையில் இருந்து வேகமாக, நான்கு வழிச்சாலைக்கு வரும் வாகனங்கள், மரத்தடியில் நிற்கும் பயணியர் மீது மோதும் அபாயம் உள்ளது. அத்துடன், நிழற்குடை அமைத்தும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. அரசு, தனியார் பஸ்களை, நிழற்குடை முன் நிறுத்தி, பயணியரை ஏற்றி இறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X