அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வரித்துறையினர் நடத்திய ரெய்டு நிறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
00:27

நாமக்கல்:நாமக்கல்லில், அரசு ஒப்பந்ததாரர் வீடு, ஓட்டல், அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 70. நாமக்கல்லில் வசித்து வரும் அவர், அரசு கட்டடங்களை ஒப்பந்தம் பெற்று, பணிகளை மேற்கொண்டு வருகிறார்.சென்னையில், பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரியம், குடிசை மாற்றும் வாரியம் என, அனைத்து கட்டட ஒப்பந்தங்களை பெற்று வருகிறார்.நாமக்கல்லில், நகராட்சி குடிநீர் திட்டப்பணி, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி, நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட, அரசு பணிகளை, ஒப்பந்தம் பெற்று, பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், கடந்த, 28ல், நாமக்கல், அழகுநகர் சூர்யா கார்டன் பகுதியில் உள்ள, அவரது வீடு, கந்தசாமி நகரில் உள்ள அவரது அலுவலகம், சேலம் சாலையில் உள்ள அவரது ஓட்டல்.அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளிட்ட இடங்களில், சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 30க்கும் மேற்பட்டோர், ஐந்து குழுக்களாக பிரிந்து, சோதனை செய்தனர்.மூன்று நாட்களாக நடந்த சோதனை நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்தது.அதில், வரி ஏய்ப்பு புகாரில் நடத்தப்பட்ட சோதனையில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், தொழிலாளர்களுக்கு செய்த செலவுகள், பொருட்கள் வாங்கியதற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
01-நவ-202016:04:28 IST Report Abuse
R VENKATARAMANAN I agree that the Income-tax Department or Enforcement directorate do their job well as assigned to them and publish the details in all magazines. But there is no subsequent follow-up in any of the cases. Business people join hands with ruling people and do all mischiefs in order to amass wealth. And they are not strictly watched or warned because they blessed by the ruling party in one way or another. The Center should take intiative and bring them to books then and there without any loss of time. Otherwise it may construed by the public as a horse trading
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X